என் வாழ்க்கையை சீரழித்தார்.... பகீர் கிளப்பும் நடிகை சோனா!
நடிகை சோனா:
தமிழ் சினிமாவில் பல்வேறு நகைச்சுவை காட்சிகளிலும் கிளாமரான காட்சிகளிலும் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை சோனா. இவர் கடந்த 2008ம் ஆண்டில் மிஸ் தமிழ்நாடு என்ற பட்டத்தை வென்றிருக்கிறார் .
கோலிவுட் திரைப்படங்களில் தனது மிகச் சிறந்த குத்தாட்ட பாடல்களின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த குசேலன் திரைப்படத்தில் இவர் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

சோனாவின் பேட்டி:
திரைப்படங்களில் கிளாமரான காட்சிகளில் திகட்ட திகட்ட நடித்துக் கொடுக்கும் சோனாவுக்கு தனி ரசிகர்களே இருந்தார்கள். குறிப்பாக நடிகை சோனா மற்றும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து விடும்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் நடிகை சோனா... எல்லோரும் என்னை ஒரு கவர்ச்சி பொருட்டாக தான் பார்த்தார்கள். என் வாழ்க்கையை மூன்று பேர் சீரழித்து விட்டார்கள் என்று மிகவும் கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
மோசமான அனுபவம்:

மேலும் பல பேர் என்னை கவர்ச்சி நடிகை என்றே அடையாளப்படுத்தினார்கள். அது எனக்கு மிகவும் கோபத்தை வர வைக்கும். நான் நடிகை சோனா என்று கூறுங்கள் என்று சொல்லத் தோன்றும். நான் கவர்ச்சியாக இருப்பது தான் என்னுடைய பிளஸ். நான் கவர்ச்சியாக இருப்பது தான் என்னோட மைனஸ் என்று கூறினார்.

பெயர் குறிப்பிடாத 3 நபரால் என் வாழ்க்கை சீரழிந்துவிட்டது. ஆம் என்னை விட 20....30 வருஷம் வயதில் மூத்தவர்கள் எல்லாம் நான் ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டிருக்கும் போது வேண்டுமென்றே என்னை உரசிச் செல்வார்கள். அந்த டைமில் நம்மால் பெரிதாக ரியாக்ட் செய்ய முடியாது. அப்படி செய்துவிட்டால் படங்களில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போய்விடும் என்ற ஒரு அச்சத்தில் நான் அதை கண்டும் காணாமல் சென்றுவிடுவேன்.
