நம்ம சிவனாண்டி பெத்த பொண்ணா இது? ஸ்ரீ திவ்யாவுக்கு குவியும் காதல் ப்ரோபோசல்!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அத்துடன் முதல் படத்திலேயே இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
அந்த அப்படத்தை தொடர்ந்து ஸ்ரீதிவ்யாவிற்கு மளமளவென வைப்புகள் குவிய துவங்கியது. ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில், பெங்களூரு நாட்கள், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு ஏரளமான தமிழ் படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
பின்னர் புது நடிகைகளின் வரவுகளால் வாய்ப்புகள் இழந்தது சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். ஆனாலும், இன்று வரை ஸ்ரீ திவ்யா பலரது பேவரைட் நடிகையாகவே இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் சிம்பிளான மேக்கப்பில் இயற்கையை ரசித்து பூக்களின் வாசனையை நுகரும் சில கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் இதயத்தை கொள்ளையடித்துவிட்டார்.