rajini
கர்நாடகாவில் பஸ் நடத்துனராக வேலை செய்து சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னை வந்தவர் நடிகர் ரஜினிகாந்த். நடிப்பு பயிற்சி கல்லூரியில் படித்தவர் பாலச்சந்தர் கண்ணில் பட்டு நடிகராக மாறினார். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்துதான் அவர் திரையுலகில் அறிமுகமானார்.
அதன்பின் சில திரைப்படங்களில் வில்லனாகவும், கமல்ஹாசனின் நண்பராகவும் நடித்து வந்தார். ஒருகட்டத்தில் ஹீரோவாக நடிக்க துவங்கி கமலுக்கு இணையான ஹீரோவாகவும் மாறினார். இதற்காக பல அவமானங்களை அவர் தாண்டி வந்துள்ளார். சினிமாவில் நடிக்க வந்த புதிதில் நடிகை ஸ்ரீதேவியுடன் பல படங்களில் நடித்தார். பதினாறு வயதினிலே, மூன்று முடிச்சி உள்ளிட்ட பல படங்களிலும் ரஜினி நடித்தார்.
இந்நிலையில், ஒருமுறை ரஜினி பற்றிய தனது அனுபவங்களை பகிர்ந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவி ‘மூன்று முடிச்சி படத்தில் நடித்த போது கமல்ஹாசன் பெரிய நடிகர். ரஜினி சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். அந்த படத்திற்கு கமல் பெற்ற சம்பளம் ரூ.30 ஆயிரம். எனக்கு 5 ஆயிரம். ரஜினிக்கு 2 ஆயிரம் சம்பளமாக கொடுத்தார்கள்.
ரஜினி ஒரு சிறந்த மனிதர். அன்பாக பேசுவார். எல்லோருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்வார். என் அம்மாவுக்கு அவரும் ஒரு மகன்தான். ‘ கமல்ஹாசன் போல நானும் பெரிய ஸ்டார் ஆவேனா?’ என அம்மாவிடம் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பார். கண்டிப்பாக நீங்கள் பெரிய ஸ்டார் ஆவீர்கள் என அம்மா அவருக்கு நம்பிக்கை கொடுப்பார். அவர் கூறியது போலவே ரஜினியும் பெரிய ஸ்டாராக மாறினார்’ என ஸ்ரீதேவி கூறியிருந்தார்.
Vijay TVK:…
தனுஷ் நடித்த…
Karur Vijay:…
கரூரில் நடந்த…
Karur: நடிகர்…