Categories: Cinema News latest news

பாலசந்தரிடம் ரஜினியை மாட்டி விட்ட நடிகை! அதுக்கு குடிக்கிற காப்பியில் இதையா கலக்குறது?

Actor Rajinikanth: தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டாராக கிட்டத்தட்ட 45 வருடங்களை கடந்து நிலைத்து நிற்கிறார் நடிகர் ரஜினிகாந்த். சிவாஜிராவ்வாக இந்த சினிமாவிற்குள் நுழைந்தவரை ரஜினியாக மாற்றியது பாலசந்தர்தான். முதன் முதலில் ரஜினியை அடையாளம் காட்டியதே பாலசந்தர்தான். அதனால்தான் இன்று வரை எந்த மேடையானாலும் பாலசந்தரை பற்றி பேசாமல் ரஜினி கீழிறங்க மாட்டார்.

அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமான ரஜினி தொடர்ந்து கமலுடன் பல படங்களில் இணைந்து நடித்தார். ஆரம்பத்தில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்ற ரஜின் பைரவி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆரம்பத்தில் பல இன்னல்களை கடந்துதான் இந்த சினிமாவிற்குள் வந்திருக்கிறார்,

இதையும் படிங்க: தலைவர்171 புரோமோ டயலாக்கை லோகேஷ் எங்கிருந்து சுட்டிருக்கார் பாருங்க… திருப்பதிக்கே லட்டா?

எப்படியாவது நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தவர் ஹீரோவாக வேண்டும் என்று நினைக்கவில்லையாம். வில்லனாக நடிக்க வேண்டும் என்றுதான் வந்திருக்கிறார். ஆனால் காலம் அவரை இன்று ஒட்டுமொத்த இந்தியாவிற்குள் சூப்பர் ஸ்டாராக்கி அழகு பார்த்திருக்கிறது.

இந்த நிலையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒரு சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து இன்று சின்னத்திரையில் பல தொடர்களை தயாரித்ததன் மூலம் பெரிய தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார் குட்டி பத்மினி. குட்டி பத்மினி ரஜினியை பற்றி பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். ரஜினியை குட்டி பத்மினிக்கு அறிமுகப்படுத்தி வைத்ததே கமல்தானாம்.

இதையும் படிங்க: போஸ்டர்லயும் காணோம்.. ப்ரோமோஷன்லயும் காணோம்! நடிகையை காக்க வைத்து ஏமாற்றிய ஹரி

அதிலிருந்தே அவர்கள் நண்பர்களாக மாறினார்களாம். அப்போது குட்டி பத்மினிதான் அவர்கள் குரூப்பில் நன்றாக சம்பாதித்து கொண்டிருந்தவராம். அவருக்கு கிடைக்கிற 100 ரூபாயில் ரஜினி , கமல் ,குட்டி பத்மினி மற்றும் சில நண்பர்கள் டீ குடித்து நேரத்தை கழிப்பார்களாம். அதுவும் ரஜினி மிகவும் கூச்சம் சுபாவம் கொண்டவராக இருப்பாராம். அவரிடம் வம்பிழுப்பதே நடிகை ஸ்ரீபிரியாதானாம்.

sri

அப்படி ஒரு சமயம் பாலசந்தர் படப்பிடிப்பில் ரஜினி குடிக்கிற காப்பியில் ஸ்ரீபிரியா எதையோ கலந்து கொடுக்க ரஜினியும் அதை குடித்துவிட்டு ஷாட்டுக்கு போயிருக்கிறார். ஆனால் அவரால் வாயையே திறக்க முடியவில்லையாம். இருந்தாலும் எப்படியோ டையலாக்கை சொல்லி முடித்துவிட்டாராம். பாலசந்தர் என்னாச்சு என்று கேட்டும் ரஜினி ஒன்றும் சொல்லவில்லையாம். ஷாட் முடிந்ததும் ஸ்ரீபிரியாவிடம் ஏன் இப்படிலாம் செய்றீங்க என செல்லமாக சண்டையிட்டாராம் ரஜினி.

இதையும் படிங்க: தலைவர் 171 பட டைட்டில் இதுதான்!.. வெளியான வீடியோ!. இது நம்ம சரத்குமார் பட டைட்டில் இல்ல!…

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini