sripriya
Actress Sripriya: தமிழ் சினிமாவில் 80களில் ஒரு ரியல் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தவர் நடிகை ஸ்ரீபிரியா. ரஜினிக்கு சீனியரான ஸ்ரீபிரியா ரஜினியுடன் இணைந்து பல படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். குறிப்பாக ரஜினியுடன் அதிகமாக ஜோடி சேர்ந்து நடித்த நடிகையாக ஸ்ரீபிரியா தான் இருந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கமலுடனும் சேர்ந்து அதிகமான படங்களில் நடித்திருக்கிறார்.
இப்படி 80களில் இருபெரும் துருவங்களாக இருந்த ரஜினி கமலின் ஆஸ்தான நடிகையாக இருந்தவர் ஸ்ரீபிரியா. இந்த நிலையில் நடிகை ஸ்ரீபிரியாவின் காதல் கதை குறித்த ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிரபல பத்திரிகையாளர் ஒருவர் அவருடைய காதல் பற்றி சில தகவல்களை கூறி இருக்கிறார். அவர் காதலித்த நடிகர் வேறு யாருமில்லை நவரச நாயகன் கார்த்திக் தானாம்.
இதையும் படிங்க: நான் சரக்கடிக்கறத நிறுத்த காரணமே அவர்தான்!.. இப்படி ஓப்பனா சொல்லிட்டாரே ராதாரவி!..
ஏற்கனவே கார்த்திக் ராகினி என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இதற்கு முன்பாகவே நடிகை ஸ்ரீபிரியாவை காதலித்துக் கொண்டிருந்தாராம் .இருவருக்கும் வயது வித்தியாசம் 5 என்று அந்த பத்திரிகையாளர் கூறினார். இதில் கார்த்திக்கை விட ஸ்ரீபிரியா மூத்தவராம். இருந்தாலும் கார்த்திக் மீது அலாதி அன்பு கொண்டிருந்தாராம் ஸ்ரீபிரியா.
இதில் ராகினியை திருமணம் செய்தது அவருக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கல்யாணம் முடிந்த கையோடு அடுத்ததாக படப்பிடிப்பிற்கு ராகினியுடன் வந்த கார்த்திகை பார்த்து ஸ்ரீப்ரியா பெரும் கோபத்தில் அவர்கள் இருவரையும் போட்டு அடித்ததாக அந்த பத்திரிகையாளர் கூறினார். அடித்ததோடு மட்டுமல்லாமல் நேராக ஒரு அறைக்குள் சென்று தற்கொலைக்கும் முயன்றதாக சொல்லி இருக்கிறார் அந்த பத்திரிகையாளர். அதன் பிறகு பிரபல தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி தான் ஸ்ரீ பிரியாவை காப்பாற்றி கொண்டு வந்தாராம்.
இதையும் படிங்க: தைரியம் இருந்தா விஜய் இத பண்ணட்டும்! தளபதிக்கு சவால் விடுக்கும் பிரபலம்
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…