×

ஆண்களுடன் நடிகை ஸ்ருதி செய்த கேவலம்! உடந்தையாக இருந்த அம்மா... ஆசிட் வீசுவேன் என மிரட்டல்!

ஆடி போனா ஆவணி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருதி. இந்த படம் சரியாக கைகொடுக்காததால் மேட்ரி மோனியில் வரன் தேட ஆரம்பித்தார்.
 

இதில் வந்து சிக்கியவர் தான் அமுதன் வெங்கடேசன் சென்னை முகப்பேரை சேர்ந்த குழந்தைகளின் பொம்மைகள் மற்றும் ஆடைகள் விற்பனை செய்யும் இளம் தொழிலதிபர். இவருடன் நன்றாக ஊர் சுற்றியுள்ளார் ஸ்ருதி. அமுதனும் கல்யாண கனவில் லட்ச கணக்கில் பணம் செலவழித்துள்ளார். 

இதற்கிடையில் ஸ்ருதி மேல்படிப்பு படிக்க லண்டன் சென்று விட்டார். ஆனாலும் அமுதன் சுருதிக்கு வாட்ஸ்அப் கால், ஸ்கைப் வீடியோ கால் மூலம் பேசி வந்துள்ளார். இதே சமயத்தில் அமுதனின் அப்பா ராஜசேகரும் சுருதியிடம் பேசி வந்திருக்கிறார்.

ஆனால் அமுதனின் நடவடிக்கை பிடிக்காததால் சுருதி விலகுவதாகவும் மேலும் கல்யாணமும் வேண்டாம் என்று சொல்லி விட்டார். இதையடுத்து வீடியோ காலில் அமுதன் பேசும்போது, காதலிக்க போறியா இல்லையா? கல்யாணம் செய்துக்க போறியா இல்லையா என்று தனது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டல் வீடியோவை அனுப்பி உள்ளார். இதற்கு ராஜசேகரும் உடந்தையாக இருந்துள்ளார். மேலும் இந்தியா வந்தால் ஆசிட் வீசுவேன் என மிரட்டியுள்ளனர்.

இதில் பயந்து போன ஸ்ருதி அம்மா சித்ராவிடம் சொல்ல போலிசில் புகார் கொடுத்து அப்பா மகன் இருவரையும் சிறை வைத்து பின்னர் ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.

இங்கு தான் பிரச்சணை வேறு விதமாக சென்றுள்ளது. நடிகை ஸ்ருதி மற்றும் தாய் சித்ரா இருவரும் ஏமாற்று பேர்வழிகள் என போலிசாருக்கு தெரியவந்துள்ளது. ஏற்கனவே இது போன்று மேட்ரிமோனியில் வரன் தேடுவதாக ஒருவரை ஏமாற்றி 45 லட்சம் பணம் மோசடி செய்து சிறை சென்று வந்துள்ளனர். தற்போது அமுதனும் அதே வரிசையில் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்த போலிசார் ஸ்ருதி, தாய் சித்ரா, சகோதரன் சுபாஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது போன்று நடிகை ஸ்ருதி மீது பல புகார்கள் உள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News