டான்ஸ் ஆட தெரியாதவருக்கு இந்த வயசுல ரேஸ் எதுக்கு? அஜித் பக்கம் திரும்பிய சுசி புயல்

by Rohini |
ajithsuchithra
X

சுசி புயல்: சமீபகாலமாக தமிழ் சினிமாவை சுசி என்ற புயல் ஆட்கொண்டிருக்கிறது. தனுஷ், திரிஷா விவகாரத்தில் தொடங்கி வரிசையாக பல நடிகர்களை, நடிகைகளை பற்றி சர்ச்சையான கருத்துக்களை பேசி வருகிறார் சுசித்ரா. சமீபத்தில் கூட விஷாலின் இந்த நிலைக்கு காரணம் அவருடைய தகாத பழக்க வழக்கம் என்றும் இரவு பாட்டிலோடு என் வீட்டிற்கே வந்தார் என்றும் ஓப்பனாக பேசியிருந்தார்.

இவர் மீது திரையுலகில் பலரும் அதிருப்தியில் தான் இருக்கிறார்கள். ஏன் இந்த மாதிரி சுசி அனைவரையும் தரம் தாழ்ந்து பேசி வருகிறார் என்று புலம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலையில் அஜித் பக்கமும் தன் கவனத்தை திருப்பியிருக்கிறார் சுசித்ரா. சமீபத்தில் துபாயில் நடந்த 24 ஹெச் கார் பந்தயத்தில் அஜித்தின் அணி மூன்றாவது இடம் பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது.

அஜித்தின் பேஷன்: சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் தன் பேஷனை நோக்கி அஜித் பயணம் செய்து கொண்டு இருக்கிறார். அந்த பயணத்தை பாராட்டி பலரும் பாராட்டி வரும் நிலையில் சுசி இந்த வயசான காலத்தில் இது தேவையா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அஜித் ரசிகர்களை பற்றி தெரிந்தே இந்த மாதிரி பேசியிருப்பது பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல் போய் விட்டாரே என்றும் சில பேர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


சினிமாவில் நடனம் , சண்டை போட முடியாதவருக்கு இந்த வயசான காலத்தில் கார் ரேஸ் தேவையா? கார் ரேஸில் அதிகப்படியான பணத்தைக் கொண்டு போய் கொட்டாமல் தமிழ் நாட்டில் ஏழை குழந்தைகளின் படிப்புக்காக செலவு செய்யலாமே? விஷாலை விட அஜித்தை பார்த்தால்தான் பாவமா இருக்கிறது என சுசித்ரா மிகவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

ரசிகர்களின் பலம்: அஜித் ரசிகர்களின் பலம் என்ன என்பது திரையுலகிற்கே தெரிந்த விஷயம். அப்படி இருக்கையில் சுசித்ராவுக்கு இது தேவையா என்று அவருக்கே இந்த கேள்வியை திருப்பியிருக்கின்றனர் மற்ற ரசிகர்கள். அதுவும் அவரவருக்கு தனி பேஷன் இருக்கும். அது அவரவர் இஷ்டம். அப்படி இருக்கும் போது ஏன் சுசித்ரா இவ்வாறெல்லாம் பேசியிருக்கிறார் என்றும் பரிதாபப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அஜித் பலருக்கும் தெரியாமல் பல உதவிகளை செய்து கொண்டுதான் இருக்கிறார் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

Next Story