இயக்குனர்களை மதிக்கமாட்டா ஆனால்... சில்க் ஸ்மிதா குறித்து நடிகை சொன்ன தகவல்!

 
silk amitha

நடிகை சில்க் ஸ்மிதா: 

கவர்ச்சியை முகம் சுளிக்காமல் ரசிக்க வைத்த நடிகை தான் சில்க் ஸ்மிதா. காந்த கண்ணழகியாக 70ஸ் 80களில் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வசியம் செய்தவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. இயக்குனர் வினுசக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் சிலுக்கு சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

silk amitha

தொடர்ந்து பல திரைப்படங்களில் கவர்ச்சியான ரோல்களில் நடித்துள்ளார். அவரது ரோல்கள் இன்றும் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் சில்க்கின் மரணம் இன்று வரை புரியாத மர்மம் ஆகவே இருந்து வருகிறது .

நடிகை சுஜாதாவின் பேட்டி: 

தொடர்ந்து பலரும் சில்க் ஸ்மிதா உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேட்டிகளில் கூறுவது உண்டு. அந்த வகையில் தற்போதைய நடிகை சுஜாதாவின் பேட்டி வைரல் ஆகி வருகிறது. அதாவது நடிகை சில்க் ஸ்மிதா பெரிய தலைகளான படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் உள்ளிட்டோரை மதிக்கவே மாட்டார். 

அவங்களிடம் கால் மேல் கால் போட்டு தான் பேசுவார். என்ன ஷாட்டுக்கு டைம் ஆச்சா? வரேன் போங்க என்று திமிராக தான் பதில் சொல்வார். ஆனால், அதுவே அவ படத்துல லைட் மேன், கேமரா மேன், அசிஸ்டன்ட் இவங்களிடம் மிகவும் அன்பாகவும் பாசமாகவும் பேசுவாள். 

silk amitha

இயக்குனர்களை மதிக்கமாட்டா...

அவங்களுக்கு டீ கொடுக்கிறது. அதோ ஒரு அண்ணா நிக்கிறாங்க அவங்களுக்கு காபி கொடுங்க என்று அவ்வளவு அரவணைத்து பேசுவாள். ஏனென்றால் இயக்குனர் தயாரிப்பாளர்களால் மோசமான அனுபவத்தை எதிர்கொண்டிருக்கிறார். அதனால் தான் அது போன்ற நபர்களை கொஞ்சம் மதிக்க மாட்டாள்.  அவங்க கிட்ட ஆட்டிட்யூட் காட்டுவாள். ஆனால் கேமராவுக்குப் பின் அவரின் வேறு முகத்தை பார்க்கலாம் என நடிகை சுஜாதா பேசியிருக்கிறார்.

Tags

From Around the web