Connect with us
vijayakanth

Cinema News

அவர் வேற மாதிரி.. சான்சே இல்ல!.. விஜயகாந்திடம் இதைத்தான் கற்றுகொண்டேன்!. உருகும் சுகன்யா..

பாரதிராஜா இயக்கத்தில் நடிகர் நெப்போலியன் அறிமுகமான புதுநெல்லு புதுநாத்து படம் மூலம் நடிக்க துவங்கியவர்தான் நடிகை சுகன்யா. இந்த படத்தில் இடம் பெற்ற ‘கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்’ என்கிற பாடல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார்.

விஜயகாந்த்,  சத்தியராஜ், பிரபு, கமல்ஹாசன், அரவிந்த்சாமி, கார்த்திக் என 90களில் முன்னணி நடிகர்களாக இருந்த எல்லா நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். சத்தியராஜுன் அதிக படங்களில் நடித்தார். இவரின் நடிப்பில் வெளியான திருமதி பழனிச்சாமி, தாலாட்டு, மகாநதி, சின்ன கவுண்டர், இந்தியன், வால்டர் வெற்றிவேல் என பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.

இதையும் படிங்க: பகத் பாசிலுக்கு இப்படி ஒரு நோயா?!. குணப்படுத்த முடியுமா?!… அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்!..

எனவே, 90களில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்தார் சுகன்யா. ஒரு கட்டத்தில் மார்க்கெட்டை இழந்த சுகன்யா சீரியல் பக்கம் போனார். கடைசியாக சேரன் இயக்கிய திருமணம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திந்தார். மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார் சுகன்யா. சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

15க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய சுகன்யா பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். புதுநெல்லு புது நாத்து படம் 2 செட்யூல் மட்டுமே முடிந்திருந்தது. ஆனால், என்னுடைய புகைப்படத்தை போட்டு சில பத்திரிக்கைகள் செய்திகளை வெளியிட்டது.

chinna

chinna

இதைப்பார்த்த இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் அவர் எடுக்க திட்டமிட்டிருந்த சின்னக் கவுண்டர் படத்தில் நான்தான் கதாநாயகி என முடிவு செய்தார். யார் சொல்லியும் அவர் கேட்கவில்லை. ஹீரோ விஜயகாந்த், மனோரமா, கவுண்டமணி, செந்தில் என எல்லாமே பெரிய நடிகர்கள். 2வது படமே பெரிய நடிகர்களுடன் என்பதால் பதட்டமாக இருந்தது.

ஆனால், விஜயகாந்த் மிகவும் இயல்பாக பேசினார். அவருக்கு மேக்கப் போடவே சில மணி நேரங்கள் ஆகும். பொள்ளாச்சியில் காற்று வேகமாக வீசும். தலைமுடி கலையாமல் இருக்க வேண்டும். கலைந்தால் மீண்டும் சீவ வேண்டும். மிகவும் பொறுமையுடன் இருப்பார். கோபப்படக்கூடாது என்பதை அவரிடம் கற்றுக்கொண்டேன். எத்தனை ஹிட் படங்களை கொடுத்திருக்கும் நடிகர் அவர். நானோ புதுமுகம். ஆனால், எனக்கு எந்த பதட்டமும் இல்லாமல் அவர் பார்த்துகொண்டார்’ என உருகியிருக்கிறார் சுகன்யா.

Continue Reading

More in Cinema News

To Top