நீங்க என்னோட Ex மாதிரி இருக்கீங்க!.. ரசிகரின் கமெண்டுக்கு சுனைனா கொடுத்த நச் பதில்!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை சுனைனா. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்
 
sunaina

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை சுனைனா. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களையும் புதிய படங்கள் தொடர்பான தகவல்களையும் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் பதிவிட்ட கமெண்டுக்கு சுனைனா அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.


தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்திருந்த  நடிகை சுனைனா, தமிழில் நகுலுக்கு ஜோடியாக நடித்த  காதலில் விழுந்தேன்  திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனத்ஹில் இடம் பிடித்த நடிகைகளில்ல் சுனைனாவும் ஒருவர். தொடர்ந்து  மாசிலாமணி ,  வம்சம் ,  நீர்ப்பறவை , சமர்’, ‘தெறி ,  காளி ,  சில்லுக்கருப்பட்டி ,  ட்ரிப் ,  ரெஜினா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகையாக வரவேண்டிய இவர் சரியான படங்களை தேர்வு செய்யாததால்  டஹ்ற்போது பெரிய வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார்.

sunaina

சுனைனா சமூக வலைதளங்களில் என்ப்போதும் ஆக்டிவாக இருப்பார். இந்த நிலையில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் உங்களைப் பார்க்க என்னோட Ex காதலி மாதிரியே இருக்கீங்க. ரியலி மிஸ் யூ  என்று கமெண்ட் செய்திருந்தார். இதைப் பார்த்த சுனைனா சரி டா... இப்ப என்ன? என்று கலகலப்பாகப் பதிலளித்துள்ளார்.

ரசிகரின் காதல் நினைவுகளை வெளிப்படுத்திய கமெண்டுக்கு சுனைனா இப்படி பதிலளித்திருப்பது சமூக வலைத்தளங்களில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Tags

From Around the web