ரத்த காயங்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் சுனைனா - என்ன ஆச்சு? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நகுலிற்கு ஜோடியாக காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் நடிகை சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் , நீர்ப்பறவை, தெறி , சமர், சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட நேர்த்தியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
நேச்சுரலான நடிகை என பெயரெடுத்த சுனைனா தற்ப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார். ஆம், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் "ட்ரிப்" என்ற படத்தில் யோகி பாபுவுடன் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கினாள் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றுள்ளது.
இந்நிலையில் சுனைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகம் மற்றும் உடலில் ரத்தம் வடிய காயங்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். ஆனால், இது படத்தில் நடிக்கும் காட்சிக்காக செய்த மேக்கப், ஆளில்லா நடுக்காட்டில் வெறி நாய் ஒன்றுடன் மாட்டிக்கொள்ளும் போது அதனிடம் இருந்து தப்பி ஓடி வரும்படியான காட்சிக்காக இப்படி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.