×

ஆமா என் வாழ்க்கையில ஒருத்தர் இருக்காரு'...!நடிகை டாப்ஸி 'காதல்' பற்றி அதிரடி... 

நடிகை டாப்ஸி நடிப்பில் இந்த ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான 'தப்பட்'  படம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்களும் விமர்சகர்களும் ஒருசேர படத்தை கொண்டாடுகின்றனர். 

 

சமீபத்தில் வட இந்திய சேனலுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் தனது காதல் பற்றி மனம் திறந்துள்ளார். டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் வீரர் 'மதியஸ் போ' என்பவரை அவர் காதலிப்பதாக சமீபத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் கூறும்போது "நான் எதையும் யாரிடமிருந்தும் மறைக்க விரும்பவில்லை. என் வாழ்க்கையில் அந்த ஒருவர் இருக்கிறார் என்பதை பெருமையுடன் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அதே நேரத்தில் எல்லா பத்திரிகைகளிலும் நான் Headlines-ல் வரவும் விரும்பவில்லை. ஏனென்றால் அது எனது நடிப்பு வாழ்க்கையை பாதிக்கும். இத்தனை வருடங்களாக போராடி பெற்ற வெற்றிகளையும் சேர்த்தே பாதிக்கும்.

எனவே அதை செய்ய நான் விரும்பவில்லை. என் குடும்பத்திற்கும் என் வாழ்க்கையில் ஒருவர் இருக்கிறார் என்பது நன்றாக தெரியும். அப்படி தெரிந்திருப்பதை தான் நானும் விரும்புகிறேன். ஏனென்றால் எனக்கு கணவராக வரப்போகிறவர், எனக்கு மட்டுமல்ல என் குடும்பத்தினருக்கும் பிடித்திருக்க வேண்டும்" என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News