நான் நல்லா இருக்க 2062 வருஷம் ஆகும் - வைரலாகும் திரிஷா இன்ஸ்டா பதிவு!

 
நான் நல்லா இருக்க 2062 வருஷம் ஆகும் - வைரலாகும் திரிஷா இன்ஸ்டா பதிவு!

லேசா லேசா படம் மூலம் நாயகியாக றிமுகம் ஆனவர் நடிகை திரிஷா. தொடர்ந்து ரஜினி,விஜய், அஜித், கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, தனுஷ் என அனைத்து நடிகர்களுடனும் நாயகியாக நடித்துள்ளார். திரையுலகிற்கு வந்து 26 ம் ஆண்டுகளில் கூட நாயகியாக மட்டுமே நடித்து வருகிறார்.

பொதுவாக நடிகைகளில் அதிகம் கிசுகிசுக்களில் சிக்காதவர் திரிஷா. ஆனால் சமீபகாலமாக, நடிகர் விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் இடையே நட்புக்கும் மீறிய உறவு இருப்பதாகச் சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் உலா வந்தன. குறிப்பாக இருவரும் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்றதாக வெளியான சில புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இருப்பினும், இவை எதற்கும் திரிஷா அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்காமல், தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது வரும் சில வதந்திகளுக்கு பதிலடியும் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் திரிஷா தந்து இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்

நான் நல்லா இருக்க 2062 வருஷம் ஆகும் - வைரலாகும் திரிஷா இன்ஸ்டா பதிவு!

ஒரு மணிநேரம் தூக்கம் குறைந்தால், அதனை முழுமையாக ஈடுகட்ட சுமார் 4 நாட்கள் ஆகுமாம். அப்படிப் பார்த்தால், நான் இழந்த தூக்கத்தை ஈடுகட்டி முழுமையாக நன்றாக இருக்க 2062-ம் ஆண்டு ஆகிவிடும்! என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவை பார்க்கையில் அவர் தூக்கமில்லமல் இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

From Around the web