சும்மா ஜொலிக்காராரே திரிஷா!.. ஒவ்வொரு போட்டோவும் வேற லெவல்!...

நடிகை திரிஷாவின் புதிய படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
trisha

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருபவர் திரிஷா. மிஸ் மெட்ராஸ் பட்டத்தை பெற்றவர் துவக்கத்தில் கதாநாயகியின் தோழிகளில் ஒருவராக சில படங்களில் நடித்தார். அதன் பின் கதாநாயகியாக நடிக்க தொடங்கி ரசிகர்களிடம் பிரபலமானார்.

trisha

சாமி, கில்லி போன்ற படங்களின் வெற்றி திரிஷாவை முன்னணி நடிகையாக மாற்றியது. அதன்பின் தமிழ், தெலுங்கு ஆகிய மொழியில் நிறைய படங்களில் நடித்தார்.ஆனால் நயன்தாரா நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட்டதால் திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்து போனது..

trisha

ஆனால் பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின் திரிஷா தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க தொடங்கினார். விஜயுடன் லியோ, அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அவ்வப்போது சர்ச்சையில் சிக்கினாலும் திரிஷா எதற்கும் பதில் சொல்வதில்லை.. அதை பற்றி விளக்கமும் கொடுப்பதில்லை..

trisha


ஒருபக்கம், விதவிதமான விடைகளை அணிந்து போஸ் கொடுத்து போட்டோ சூட் நடத்தி அது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவரின் புதிய புகைப்படங்கள் கவனம் ஈர்த்திருக்கிறது.

trisha

Tags

From Around the web