ஃபேன்ஸ் சொல்லியும் கேட்கலயே!.. விஜய் பர்த்டே போட்டோவை வெளியிட்ட திரிஷா...

நடிகை திரிஷா முதல்வர் விஜயின் பிறந்தநாள் தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
 
trisha vvijay

நடிகராக இருந்து தற்போது முதலமைச்சராக மாறியுள்ள விஜயுடன் கில்லி, ஆதி, திருப்பாச்சி, லியோ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் திரிஷா. கடந்த சில வருடங்களாக விஜய் தனது மனைவி சங்கீதா மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் திரிஷா அவருடன் நெருக்கமாக காணப்பட்டார்.

ஒருபக்கம் விஜயிடமிருந்து விவகாரத்து கேட்டு அவரின் மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த விவாகரத்து மனுவில் தனது கணவர் விஜய் நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாகவும் அதுவே விவாகரத்துக்கு காரணம் எனவும் கூறியிருந்தார். இதையடுத்து அந்த நடிகை திரிஷாதான் என பலரும் கூறினார்கள். ஆனால், விஜயோ, திரிஷாவோ இதுபற்றி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதேநேரம் அது நடந்து இரண்டு நாட்களிலேயே விஜய் ஒரு திருமணத்திற்கு திரிஷாவுடன் ஜோடியாக சென்றார். இதுவும் பரபரப்பாக பேசப்பட்டது..

கடந்த சில வருடங்களாகவே விஜயின் பிறந்தநாளில் அவருடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு திரிஷா வாழ்த்து சொல்லி வந்தார். ஜூன் 22ம் தேதியான நேற்று முதல்வர் விஜய் தனது 52வது பிறந்தநாளை கொண்டாடினார். பலரும் அவருக்கு வாழ்த்து சொன்னார்கள். ஆனால் தற்போது விஜய் தமிழக முதலமைச்சராகிவிட்ட நிலையில் ‘தயவு செய்து நீ எந்த வாழ்த்தும் சொல்லாதம்மா’ என்று விஜய் ரசிகர்கள் நேற்று காலை முதலே சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்கள்.

trisha vijay

திரிஷாவும் நேற்று முழுவதும் வாழ்த்து தெரிவிக்காமல் அமைதியாக இருந்ததால் விஜய் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில்தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜயுடன் விஜயின் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் திரிஷா குறிப்பிட்டுள்ள நேரத்தை பார்க்கும்போது அது 21ம் தேதி இரவு சரியாக 12 மணிக்கு எடுக்கப்பட்டதாக பார்க்கப்படுகிறது. இது விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

Tags

From Around the web