புற்று நோய்: உமா இன்ஸ்டா பதிவால் சோகத்தில் ரசிகர்கள்
நடிகை உமா சங்கரி தமக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
தமிழில் 80களில் முன்னணி நடிகையாக இருந்தவ்ர் நடிகை சுமித்ரா. இவரது மகள் உமா சங்கரி. இவர் 2000ம் ஆண்டி தமிழில் சினிமாவில் அறிமுகம் ஆனார். வீர நடை, வானவில், சூரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக விஜயகாந்த் நடிப்பில் வெளியான சொக்கதங்கம் படம் அவருக்கு நல்ல அடையாளத்தை தந்தது.
இந்த நிலையில் நடிகை உமா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அதில் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாகவும் பகிர்ந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் நீங்கள் விரைவில் நலம் பெறவேண்டும் என பிராத்திப்பதாக பதிவிட்டு அவருக்கு ஊக்கம் கொடுத்து வருகின்றனர்.
மேலும் தனக்கான இரண்டாம் கட்ட கீமோதெரபி சிகிச்சை தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். "மிகவும் கடினமான, சவாலான நாட்களை எவ்வாறு கையாள்வது என்பதை நான் மெதுவாக கற்றுக்கொண்டு வருகிறேன். அதே நேரத்தில் உடல்நிலை நன்றாக, தெம்பாக இருக்கும் நாட்களை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
