vasuki
தமிழ் சினிமாவில் காமெடி கிங்காக வலம் வந்த கவுண்டமணி மற்றும் செந்தில் இவர்களுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை வாசுகி. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் என கிட்டத்தட்ட 100 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். படங்களில் வாய்ப்பு குறைந்ததால் அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுகவில் ஒரு நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார்.
ஜெயலலிதா இருக்கும் வரை செல்வ செழிப்பில் இருந்தார் வாசுகி. ஜெயலலிதா புகைப்படம் பதித்த டாலர் செயின், வைரமூக்குத்தி என அமோகமாக இருந்திருக்கிறார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு வறுமையில் வாடுவதாக சொல்லப்படுகிறது. ஜெயலலிதாவிற்கு பிறகு வாசுகி அரசியலில் ஒரு அங்கீகாரம் இல்லாமல் தவிப்பதாக தெரிகிறது.
ஆனால் நடிகர் சங்கம் செய்யாத உதவியை ஆந்திராவில் உள்ள நடிகர் சங்கம் செய்வதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். மோகன்பாபுவின் மகன்தான் பணம் கட்டி ஆந்திராவில் உள்ள நடிகர் சங்கத்தில் உறுப்பினராக்கினாராம். அதுமட்டுமில்லாமல் மோகன்லால், நாகேந்திரபாபு போன்றோர் பணம் கொடுத்து உதவியதாகவும் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
ஆனால் தமிழில்தான் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இங்கு உள்ள நடிகர் சங்கம் உதவி செய்யவில்லை என்றும் கார்த்தி, விஷால், நாசர் ஆகியோரிடம் உதவி கேட்டு கண்ணீர் மல்க அந்த பேட்டியில் கூறினார் வாசுகி. மேலும் அரசியலில் தனக்கான அங்கீகாரம் இல்லாததால் ஒரு கக்கூஸ் வேலைக்கு கூட கூப்பிட மாட்றாங்க என்றும் புலம்பியிருக்கிறார் வாசுகி.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…