Categories: Cinema News latest news throwback stories

ஆரம்பமே அதிர்ஷ்டம் தான்…சிவாஜி, எம்ஜிஆர் என தடாலடியாக திரைப்பயணத்தைத் துவக்கிய நடிகை

கும்பகோணம் இவரது சொந்த ஊர். நடிப்பில் இவர் ஒரு புலி. தனது முதல் படமான வெண்ணிற ஆடை படத்தில் நடித்ததில் இருந்தே படமும் இவரது பெயருடன் சேர்ந்து ஒட்டிக்கொண்டது. சுமார் 200 படங்களில் நடித்து அசத்தியுள்ளார். அவர் தான் வெண்ணிற ஆடை நிர்மலா. இவரது ஆரம்பகால திரையுலக அனுபவங்களைப் பற்றி பார்ப்போம்.

ஆரம்பத்தில நான் டான்ஸ் தான் ஆடிக்கிட்டு இருந்தேன். டைரக்டர் ஸ்ரீதர் வந்து புதுமுகம் வேணும்னு தேடிக்கிட்டு இருந்தார். அவரது இயக்கத்தில் நான் முதல்ல நடித்த படம் காதலிக்க நேரமில்லை. முதன் முதலா நான் நடிச்சது அனுபவம் புதுமை என்ற பாடல். அந்தப்பாடலுக்கு ஏற்ப என்னால் சரியான எக்ஸ்பிரஷனைக் கொடுக்க முடியவில்லை.

vennira aadai nirmala2

அப்போ எனக்கு ரொம்ப சின்ன வயசு. அதனால டைரக்டர் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். அடுத்த படத்துல நான் யூஸ் பண்ணிக்கிடறேன்னு சொல்லிட்டார். அவர் சொன்னது போலவே அடுத்ததாக அவர் ஆரம்பித்த வெண்ணிற ஆடை படத்தில் என்னை அழைத்து நடிக்க வைத்தார்.

அந்தப்படத்துல நடிக்கும்போது கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். என்னுடைய பேம்லி அரண்மனை பேம்லி. முதல் படத்தோட பிரிவியூ பார்த்ததும் நான் சந்தோஷப்படல. அதனால இனிமேல் நடிக்க வேண்டாம்னு தான் நான் முடிவு பண்ணினேன். குஞ்சாகோ என்ற மலையாளப் பட தயாரிப்பாளர் என்னைப் பார்த்ததும் அவரோட காட்டுத்துளசி என்ற படத்தில் நடிக்க கேட்டார்.

VA Nirmala

அப்போது எனக்கு நடிக்கறதுக்கு விருப்பமில்லை என்று சொன்னதும் ஏன் என்று கேட்டார். ஒரு நடிப்புன்னா என்னன்னு தெரியலன்னு சொன்னேன். இதெல்லாம் நான் சரி பண்ணி உன்னை நடிக்க வைச்சிக் காட்டுறேன்னாரு. அதுல பிரபலமான ஹீரோவா சத்யம் நடிச்சாரு. அவருக்கு ஜோடி. முதல் படமே ரொம்ப ஹிட்.

நல்ல ஆக்டிங்கை எப்படிக் கத்துக்கிடணும்கறதை எனக்குக் கத்துக்க முடிஞ்சது. அந்தப்படம் முடித்துவிட்டு நான் சென்னைக்கு வருவதற்குள் ரகசிய போலீஸ் 115 படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போது கவிஞர் கண்ணதாசன் ஆரம்பித்த லட்சுமி கல்யாணம்கற படத்துல நடிக்க வாய்ப்பு வந்தது.

MGR, VA Nirmala

அப்போ எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சாங்க. ஒரு பக்கம் சிவாஜி சார். இன்னொரு பக்கம் எம்ஜிஆர். ஆரம்பமே நல்ல அதிர்ஷ்டமா அமைஞ்சிருக்குன்னாங்க.

தெய்வ மகள் டிவி தொடரிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v