Connect with us
Vijayakumai Sivaji

Cinema News

அந்த வேடத்தில் நடிக்க பயந்த விஜயகுமாரி.. சிவாஜி சொன்ன வார்த்தை!.. அதன்பின் நடந்துதான் மேஜிக்..

சிவாஜி என்றாலே பலருக்கும் மிகவும் பிடித்த நடிகர். நடிகர்கள் அனைவருக்கும் உற்சாக டானிக்கும் இவர் தான். அந்த வகையில் சிவாஜி வாழ்த்தியதால் ஒரு படத்தில் விஜயகுமாரி நடித்து அசத்தியுள்ளார். அது என்ன படம் என்று பார்க்கலாமா… 

1963ல் வெளியான படம் நானும் ஒரு பெண். இந்தப்படத்தில் ஹீரோயின் விஜயகுமாரி. வசந்தி என்ற ரோலில் கருகருவென மேக் அப் போட்டு நடித்து அசத்தினார்.

அப்போது அவர் அந்தக் கேரக்டரில் நடிக்கவே ரொம்ப பயந்தாராம். அவரைப் பார்த்தவர்கள் எல்லோரும் அழகாகப் பார்க்கத் தான் விரும்புவர். ஆனால் இப்படி ‘கருப்பு மேக்கப்பில் உன்னை நீயே கெடுத்துக்காதே’ன்னு சொல்லிப் பயமுறுத்தினராம்.

அப்போது என்ன செய்ய என இருமனநிலையில் இருந்தாராம் விஜயகுமாரி. அங்கு சிவாஜி வந்துள்ளார். எந்தப்படத்துக்கு இந்த மேக்-அப்புன்னு கேட்டுள்ளார். நானும் ஒரு பெண் என்று விஜயகுமாரி சொன்னது தான் தாமதம். உடனே சிவாஜி, உன்னைப் பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு. நான் மட்டும் பொண்ணாக பொறந்துருந்தா ஏவிஎம்.செட்டியாரிடம் போய் இந்த வேடத்தில் நான் நடிக்கிறேன். எனக்குக் கொடுங்க என கேட்டுருப்பேன் என்றாராம்.

rajakumari

rajakumari

அதுமட்டும் இல்லாமல், விஜி உனக்கு இந்த வேடம் பெரும் புகழைத் தரும் என்றும் பயப்படாமல் நடி என்றும் சொன்னாராம். அவர் சொன்னது போலவே பலித்ததாம். படம் பிளாக் பஸ்டர் ஹிட். மத்திய அரசின் வெள்ளிப்பதக்கமும் கிடைத்தது. படத்தில் விஜயகுமாரி எஸ்எஸ்ஆருக்கு ஜோடியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

எஸ்.வி.ரங்கராவ், ஏவிஎம்.ராஜன், புஷ்பலதா உள்பட பலரும் நடித்த படம். ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். இந்தப்படத்தில் நடித்த விஜயகுமாரியின் நடிப்பைப் பாராட்டி ரசிகர்களிடம் இருந்து ஏராளமான கடிதங்களும் வந்ததாம். அதில் ஒரு கடிதத்தை ரசிகை எழுதியுள்ளார். அவர் கருப்பாக இருந்ததால் கணவர் வெறுத்ததாகவும் இந்தப் படத்தைப் பார்த்ததும் ஏற்றுக்கொண்டதாகவும் எழுதி இருந்தாராம். எப்படியோ விஜயகுமாரியின் நடிப்பு, ஒரு பெண்ணோட வாழ்க்கை மலர காரணமாகியது என்றால் அது பெரிய விஷயம் தான்.

Continue Reading

More in Cinema News

To Top