×

மூன்று மாப்பிள்ளைகளும் டைரக்டர்கள்தான்... `காதல்கோட்டை’ இயக்குனர் மகளுக்கு விரைவில் டும் டும் டும்

இயக்குனர் அகத்தியனின் மூன்றாவது மகளும் நடிகை விஜயலட்சுமியின் இளைய சகோதரியுமான நிரஞ்சனிக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. 
 

`காதல் கோட்டை’ படப் புகழ் இயக்குனர் அகத்தியனின் முதல் இரண்டு மகள்களா கனி, விஜயலட்சுமி ஆகிய இருவருமே காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். முதல் மகளான கனி, இயக்குனர் திருவைக் காதலித்து மணந்துகொண்டார். அடுத்தவரான நடிகை விஜயலட்சுமி, இயக்குனர் பெரோஸ் கானை மணந்துகொண்டார். 

இந்தநிலையில், இயக்குனர் அகத்தியன் குடும்பம் அடுத்த திருமணத்துக்குத் தயாராகி விட்டது. மூன்றாவது மகளான நிரஞ்சனி `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை விரைவில் மணக்க இருக்கிறார். இந்தத் தகவலை நடிகை விஜயலட்சுமி இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார். அதில், அகத்தியனின் மூன்று மாப்பிள்ளைகளுமே இயக்குனர்கள்தான் என்று மகிழ்ச்சி எமோஜி விட்டிருக்கிறார்.   

From around the web

Trending Videos

Tamilnadu News