×

நடிகை வித்யுலேகாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது - மாப்பிள்ளை யாருன்னு பாருங்க!

காமெடி நடிகை வித்யுலேகா ராமனிற்கு சஞ்சய் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்தது

 

வித்யுலேகா ராமன் பிரபல குணச்சித்திர மற்றும் சீரியல் நடிகருமான மோகன்ராம் என்பவருடைய மகள். வித்யுலேகா முதன் முதலில் ஜீவா நடிப்பில் இயக்குநா் கௌதம் மேனன் இயக்கி நீ தானே என் பொன்வசந்தம் என்ற படத்தில் அறிமுகமானவா்.

இவா் இந்த படத்தில் நடிகை சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார். அதனை தொடா்ந்து பல படங்களில் காமெடி நடிகையாக நடித்தார். இவா் குண்டாக இருப்பதால் காமெடி ரோல் தான் அதிகமாக இவரை தேடி வந்தது.  அந்தவகையில் தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கிச்சட்டை, மாஸ் என பல படங்களில் நடித்துள்ளார்.  மேலும், கடந்த ஆண்டு மட்டும் தெலுங்கில் சுமார் 6 படங்கள் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்ப்போது Fitness and Nutrition expert ஆன சஞ்சய் என்பவருடன் வித்யுலேகாவிற்கு  கடந்த 26ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றவுள்ளது. அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News