Categories: Cinema News latest news

ரீ என்ட்ரி கொடுக்கும் ரிப்பன் நடிகை…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!

சினிமாவை பொருத்தவரை சில நடிகைகள் மட்டுமே பார்த்த உடன் பக்கத்து வீட்டு பெண் போன்ற தேற்றத்தில் ரசிகர்கள் மனதில் மிகவும் ஆழமாக பதிந்து விடுவார்கள். அந்த வகையில் தனது முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா.

தற்போது டாப் நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் மற்றும் சத்யராஜ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக லதா பாண்டி என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா.

 

இந்த படத்தில் இடம்பெற்ற ஊதா கலர் ரிப்பன் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகும். முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை உருவாக்கிய ஸ்ரீதிவ்யா தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார். இறுதியாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஸ்ரீதிவ்யாவிற்கு மருது உள்ளிட்ட சில படங்கள் வெளியானது.

அதன் பின்னர் இத்தனை ஆண்டுகளில் இவர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த ஸ்ரீதிவ்யா தற்போது மார்க்கெட் இன்றி பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஸ்ரீதிவ்யா மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.

அதன்படி நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக டைகர் என்ற படம் மூலம் ஸ்ரீதிவ்யா மீண்டும் கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். இவர் ஏற்கனவே வெள்ளக்கார துரை என்ற படத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது இரண்டாவது முறையாக அவருடன் இணைந்துள்ளார்.

மேலும் இப்படத்திற்கு இயக்குனர் முத்தையா கதை வசனம் எழுத இயக்குனர் கார்த்தி இப்படத்தை இயக்க இருக்கிறார். இப்படம் பூஜையுடன் நேற்று தொடங்கியது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini