×

நடிகையின் வயதை சமூகவளைதளத்தில் கிண்டலடித்த நபர்... சும்மாவிடுமா நம்ம பொண்ணு!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவந்த படம் போடா போடி. இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி.
 

இதன்பின் இவர் பல படங்களில் நடித்து வந்தார். விஜய், தனுஷ், விஜய் சேதுபதி, விஷால் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்து வந்துள்ளார்.

இவர் இதுவரை 25 படங்களில் கமிட்டாகி நடித்துள்ளதாக பிரபல நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது அவரே கூறியுள்ளார்.

சமீபத்தில் கூட திரையுலகில் தனக்கு நடக்கவிருந்த சில கசப்பான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். இதற்கு இவரது சித்தி திரு ராதிகா சரத்குமார் கூட தனது டுவிட்டர் பக்கத்தில் வரலட்சுமியை பாராட்டி பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று இவரின் பிறந்தாள் என்பதினால் சமூக வலைத்தளங்களில் பலரும் இவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர்.

அந்த வகையில் யாரோ ஒரு ரசிகர் டுவிட்டரில் வரலட்சுமியை பார்த்து "ஆண்ட்டி உங்க வயசு 35-ஆ" என்று ஏளனமாக கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த நடிகை வரலட்சுமி "எஸ் அங்கிள், எனி ப்ரோப்லேம்" என்று சரியான பதிலடியை கொடுத்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News