×

வாய்ப்பு கேட்டா எல்லாத்துக்கும் ரெடின்னு அர்த்தம் இல்ல - இயக்குனர் மீது நடிகை பாலியல் புகார்

 

தமிழில் தேரோடும் வீதீயிலே படத்தில் அறிமுகமானவர் பாயல் கோஷ். தெலுங்கில் ‘ஒசரவல்லி’ படத்தில் நடித்தார். அப்படம் மாபெரும் ஹிட் ஆகியது. தற்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார்.

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என புகாரை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது ‘அனுராய் என்னிடம் சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு நடந்து கொண்டார். அவரது செயல் எனக்கு மோசமான உணர்வை ஏற்படுத்தியது. என்ன நடந்ததோ அது நடந்திருக்க கூடாது’ என தெரிவித்துள்ளார்.

இவரது குற்றச்சாட்டை அனுராக் காஷ்யப் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News