மேடம் என்ன இப்படி சுத்துறீங்க...உஷாருங்கப்போ! மாஸ் பண்ணும் அடா சர்மா
அடா சர்மாவின் சமீபத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tue, 2 Feb 2021

சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை அடா சர்மா. ஐட்டம் சாங்கில் ஆடியே ரசிகர்களை கவர்ந்தவர். இதையடுத்து பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் படத்தில் நடித்திருந்தார். எப்போதும் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காதவர் அடா சர்மா. எக்குத்தப்பான உடையில் இவர் அட்ராசிட்டி அப்பப்பா ரகம் தான்.
ஆனால், அவரின் வீடியோக்களில் கவர்ச்சி இருந்தாலும் கூடவே தன்னுடைய ஒரு திறமையையும் அழகாக காட்டி விடுவார். அப்படி ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மஞ்ச நிற புடவையில் ட்யூப் லைட்டை கொண்டு அம்மணி கம்பு சுத்துறார். இதற்கு ரசிகர்கள் எமோஜிகளை பறக்க விட்டு வருகின்றனர்.