×

அரைகுறையான சேலையில் பல்டி... இளசுகளைக் கவர்ந்த நடிகையின் வொர்க் அவுட்

நடிகை ஆதா ஷர்மாவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 

பாலிவுட்டைக் கலக்கி வரும் இளம் நடிகை ஆதா ஷர்மா, சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக வலம் வருபவர். இன்ஸ்டாவில் இவருக்குப் பிரத்யேக ஃபாலோயர்ஸ் கூட்டமே இருக்கிறது. 

வொர்க் அவுட் போட்டோ, வீடியோக்கள் மூலம் இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளும் ஆதா ஷர்மா, சமீபத்தில் பகிர்ந்த போட்டோ ஒன்று வைரலானது. அதைவிட அந்தப் போட்டோவுக்கு ஒரு ரசிகர் கொடுத்திருந்த கமெண்டும் அதற்கு ஆதா ஷர்மா அளித்த பதிலும் நெட்டிசன்களிடம் பாராட்டைப் பெற்றது. ஆதா பகிர்ந்திருந்த செஃல்பி ஒன்றில் மார்பகங்களைப் பெரிதாக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்யலாமே என்று ஒரு ரசிகர் கொடுத்த கமெண்டுக்கு, தேவையில்லை. இப்படி இருப்பதையே நான் விரும்புகிறேன் என்று போல்டாகப் பதிலடி கொடுத்திருந்தார் ஆதா ஷர்மா. 


தமிழில் பிரபு தேவாவுடன் சார்லி சாப்ளின் 2 படத்தில் `ஐ வாண்டு மேரி யூ மாமா’ என்று குத்தாட்டம் போட்டவர்தான் ஆதா ஷர்மா. பாலிவுட்டில் பிஸியாக ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வரும் அவர், தற்போது கடற்கரையில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார். இன்ஸ்டாவிலிருக்கும் ரசிகர்களின் ஹார்ட்டினை அள்ளி வரும் அந்த வீடியோவில், சேலை அணிந்தபடி கடற்கரையோரம் தொடர்ச்சியாக பல்டியடிக்கிறார் ஆதா. அந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News