திரையரங்குக்குப் பிறகு ஓடிடிக்கு வரும் 'இதயம் முரளி'... வெளியீட்டு தேதி அறிவிப்பு!

 
im

நடிகர் அதர்வா நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'இதயம் முரளி' திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ள 'இதயம் முரளி', காதல் ,நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான திரைப்படமாக உருவாகியுள்ளது. மேலும், அதர்வாவின் மறைந்த தந்தையும் பிரபல நடிகருமான முரளிக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், 1991-ஆம் ஆண்டு வெளியான அவரது சூப்பர் ஹிட் திரைப்படமான 'இதயம்' படத்தை நினைவுகூரும் வகையிலும் 'இதயம் முரளி' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

murali

படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ளதுடன், ப்ரீத்தி முகுந்தன் இரட்டையர்களான  நடித்துள்ளார். மேலும், கயாடு லோஹர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனுடன், ஃபஹத் பாசில், பாடகி ஜோனிதா காந்தி, இசையமைப்பாளர் எஸ். தமன் ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் இடம்பெற்றுள்ளனர்.

டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகி இளம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது ஓடிடி வெளியீட்டின் மூலம் மேலும் பல பார்வையாளர்களை சென்றடைய உள்ள 'இதயம் முரளி' திரைப்படம், ஆகஸ்ட் 7 முதல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்த ஓடிடி வெளியீட்டுக்கும் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Tags

From Around the web