
Cinema News
குட் பேட் அக்லி ஃபேன்ஸுக்கு!.. AK64 வேற வெலவில் இருக்கும்!.. ஹைப் ஏத்தும் ஆதிக்!…
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. அந்த படத்திற்கு முன் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் அஜித் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. ஆனால் ஆதிக் இயக்கிய குட் பேட் அக்லி அஜித் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தியது. அதற்கு காரணம் அஜித் ரசிகர்கள் அவரை எப்படி பார்க்க வேண்டும் என ஆசைப்படுவார்களோ அஜித்தை அப்படியே படத்தில் காட்டியிருந்தார் ஆதிக்.
அதற்குக் காரணம் அடிப்படையில் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். பல படங்களில் அஜித்தை எப்படி எல்லாம் ரசித்தாரோ அதை எல்லாம் இந்த படத்தில் கொண்டு வந்திருந்தார். அதேநேரம் குட் பேட் அக்லி திரைப்படம் தியேட்டர் அதிபர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் லாபத்தை கொடுத்தாலும் படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு இப்படம் 70 கோடி வரை நஷ்டத்தை கொடுத்ததாக சொல்லப்பட்டது.

அதோடு இந்த படத்தில் இந்த படத்தில் இளையராஜாவின் மூன்று பாடல்களை பயன்படுத்தியதால் அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். எனவே ஓடிடியிலிருந்து படத்தை தூக்கி விட்டனர். இதனாலும் 50 கோடிக்கு மேல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்கிறார்கள். ஒருபக்கம் அஜித் அடுத்த நடிக்கவுள்ள புதிய படத்தையும் ஆதிக் இயக்குகிறார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கவிருக்கிறார். சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய ஆதிக் ரவிச்சந்திரன் ‘குட் பேட் அட்லி திரைப்படத்தை நான் அஜித் ரசிகர்களுக்காக மட்டுமே எடுத்தேன். ஆனால் AK64 எல்லா தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி இருக்கும். பொழுதுபோக்கு, ஆக்ஷன், ஃபேமிலி ஆடியன்ஸ் என எல்லோரும் இந்த படத்தை கொண்டாடும் படி திரைக்கதை இருக்கும்’ என சொல்லி இருக்கிறார்.