AK64: அஜித்துக்கு நெகட்டிவ் ரோலா?!.. ஆதிக் ரவிச்சந்திரன் சொல்றத கேளுங்க!...
குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் அஜித் ஒரு படத்தில் நடிக்கிறார் என செய்திகள் வெளியானது. ஆதிக்கும் செய்தியாளர்களிடம் அதை உறுதி செய்தார். அதேநேரம் இந்த படத்தை யார் தயாரிக்கிறார்கள் என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது.
ஏனெனில் அஜித்துக்கு 183 கோடி சம்பளம் மொத்த பட்ஜெட் 300 கோடி என சொன்னதும் சன் பிக்சர்ஸ், லைக்கா, ஏஜிஎஸ் போன்ற பல தயாரிப்பு நிறுவனங்களும் பின்வாங்கி விட்டன. மும்பைக்கெல்லாம் சென்று தயாரிப்பாளரை தேடினார்கள். தற்போது தமிழ் படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்யும் கோல்ட் மைன் மணீஷ் என்பவர் இந்த படத்தை தயாரிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்த படத்தின் அறிவிப்பு முன்பே வெளியாகும் என கணிக்கப்பட்டாலும் இப்போது வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏனெனில் தயாரிப்பாளர் இன்னமும் உறுதி செய்யப்படாததுதான் காரணம் என சொல்லப்பட்டது. இந்நிலையில் சென்னையில் ஒரு கோவிலுக்கு வந்த ஆதிக் ரவிச்சந்தரனிடம் செய்தியாளர்கள் இந்த படம் பற்றி கேட்டார்கள்.
அதற்கு ‘படத்தின் ஃப்ரீ புரடெக்ஷன் வேலைகள் முடிந்துவிட்டது. லொகேஷன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பிப்ரவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும்’ எனக் கூறினார். அப்போது ஒரு செய்தியாளர் ‘இந்த படத்திலும் அஜித்துக்கு நெகட்டிவ் கதாபாத்திரமா?’ என கேட்டதற்கு ‘ இவ்வளவு சீக்கிரமாக இதை சொல்ல முடியாது.
குட் பேட் அக்லி படத்திற்கு பின் அஜித் சார் என்னை நம்பி மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அந்த பொறுப்பு எனக்கு இருக்கிறது. கண்டிப்பாக இந்த படம் எனக்கு ஒரு ஸ்பெஷல் படமாக இருக்கும். அஜித் சார் சினிமாவை எவ்வளவு நேசிக்கிறாரோ அதே அளவுக்கு கார் ரேஸையும் நேசிக்கிறார். அவர் இந்தியாவுக்கு பெருமை தேடி கொடுப்பார்’ என ஆதிக் ரவிச்சந்திரன் கூறினார்.
