×

விவேக் நினைவாக ஆத்மிகா செய்த செயல் - குவியும் ரசிகர்கள் பாராட்டு!
 

மறைந்த நடிகர் விவேக் நினைவாக நடிகை ஆத்மிகா தன் வீட்டில் மரக்கன்று நட்டுள்ளார்!
 
 
விவேக் நினைவாக ஆத்மிகா செய்த செயல் - குவியும் ரசிகர்கள் பாராட்டு!

ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. அந்த படத்தில் விவேக் ஆதிக்கு தந்தையாக நடித்திருப்பார். 

விவேக் மாரடைப்பு காரணமாக கடந்த 17ம் தேதி இறந்துவிட்டார். அவரது கனவு லட்சயமான 1 கோடி மரக்கன்றுகள் நடுவேன் என அப்துல் கலாமிடம் ஒரு முறை கூறினார். அதன்படி இதுவரை 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். இந்நிலையில் அவரது மரணத்தை தொடர்ந்து அவரின் நினைவாக பலரும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். 

அந்தவகையில் நடிகை ஆத்மிகா தன் வீட்டு தோட்டத்தில் மரக்கன்று நட்ட புகைப்படத்தை வெளியிட்டு, "நடிகர் திரு.விவேக் அவர்களின் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன்.என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியைச் செய்ய முடிவு செய்துள்ளேன். 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீரின் தேவை இதையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்து அன்றே மக்களுக்கு நன்மை சேர்க்கும் பணியைத் துவங்கியுள்ளார். அவர் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற அவரின் மகத்தானக் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம். இந்நிகழ்வில் உடனிருந்து உதவி செய்த திரு. குழந்தை இயேசு அண்ணன் அவர்களுக்கு நன்றி" எனக்கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News