×

திக்கு முக்காட செய்த அதிமுக விளம்பரங்கள் - திமுகவினருக்கு செம அடி

 
திக்கு முக்காட செய்த அதிமுக விளம்பரங்கள் - திமுகவினருக்கு செம அடி

இன்றைய செய்தி தாள்களில் திமுக தனது ஆட்சிக் காலத்தில் செய்த மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்த செய்திகள் தலைப்பு செய்தியாக வெளிவந்தது. இந்த செய்திகளை அதிமுக தனது விளம்பரங்களாக பயன்படுத்திக்கொண்டது. இது அதிமுகவின் வெற்றி யூகமாக பார்க்கப்படுகிறது.  

ஏற்கனவே தொலைக்காட்சிகளில் அதிமுக, திமுக என இரு கட்சிகளும் தேர்தலில் மக்கள் தங்களுக்கு வாக்களிக்கும் வகையில் விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. அதிமுக அரசு ‘வெற்றி நடை போடும் தமிழகமே’ என்கிற பெயரில் விளம்பரங்களையும், திமுக ‘ஸ்டாலின் தான் வாறாரு விடியல் தரப்போறாரு’ என விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.   

paper

ஆனால், செய்திதாள்களை அதிமுக பயன்படுத்திக்கொண்டது. சில நாளிதழ்களில் திமுகவின் ஆட்சி காலத்தில் திமுகவினர் செய்த அராஜகங்கள், இரட்டை நிலைப்பாடு மற்றும் ஊழல்களை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் முழுபக்க விளம்பரங்கள் வெளியானது. இது திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அதிமுகவின் தேர்தல் வியூகமாக பார்க்கப்படுகிறது. அதுவும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் வீட்டில் இருக்கும் நாளில் அதிமுக பயன்படுத்திக்கொண்டது சாமார்த்தியமான ஒன்றாக கருதப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இந்த விளம்பரங்கள் மக்களை சென்றடைந்துள்ளது. மேலும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற முடிவை மக்கள் எடுக்க இது உதவிடும் வகையில் அமைந்துள்ளது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News