×

இன்னும் 100 ஆண்டுகள் ஆட்சியில் அதிமுக : மாஸ் காட்டிய அதிமுக பிரச்சார பொதுக்கூட்டம்

 

சென்னை ராயப்பேட்டையில் நடந்த அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தனது பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. ஏற்கனவே தொடர்ச்சியாக 2 முறை ஆட்சி அமைத்திருக்கும் அதிமுக இந்த முறையும் ஆட்சி அமைப்பதில் உறுதியாக இருக்கிறது.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அதிமுக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். முதல்வருக்கும் ,துணை முதல்வருக்கும் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு மரியாதை செலுத்த மலர் தட்டு முதலில் முதல்வரிடம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், அண்ணன் முதலில் செலுத்தட்டும் என ஓ.பி.எஸ்-ஐ கை காட்டினார். அவருக்கு பின் முதல்வர் மரியாதை செலுத்தினார்.

கூட்டத்தில் வரவேற்பு உரையாற்றிய அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக ஆட்சியின் செயல் திட்டங்களை பட்டியலிட்டார். இன்னும் 100 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் நீடிக்கும் என தெரிவித்தார். அவருக்கு பின் பேசிய அமைச்சர்கள் வைத்திலிங்கம் மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் அதிமுகவை வெற்றி பெற வைப்பதற்கான பிரச்சார உத்திகளை பேசினர். 

From around the web

Trending Videos

Tamilnadu News