×

மீண்டும் அதிமுக தான்.. மையம் கருத்துக்கணிப்பின் முடிவுகள்

மக்கள் மையம் எனும் கிராமிய மக்கள் மற்றும் பயிற்சி மையம் சார்பில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தேர்தல் குறித்த மாபெரும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 
 
மீண்டும் அதிமுக தான்.. மையம் கருத்துக்கணிப்பின் முடிவுகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ந் தேதி நடைபெற இருக்கிறது. இதில் யாருக்கு வெற்றி முகம் அதிகமாக இருக்கிறது என்பதை அறிய மக்கள் மையம் எனும் கிராமிய மக்கள் மற்றும் பயிற்சி மையம் மாபெரும் கருத்துக்கணிப்பை 234 தொகுதிகளிலும் நடத்தியது. தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வரும் அதிமுக அரசின் சாதனை திட்டங்கள் குறித்தும் இந்த கருத்துக்கணிப்பில் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. 

முக்கியமாக, கூட்டுறவு கடன் தள்ளுபடி, குடிமராமத்து திட்டம், தொடர் மின்சாரம், பொங்கல் பரிசு, அம்மா மினி கிளினிக்குகள், ஜல்லிக்கட்டு தடையை நீக்கியது, காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, ஏழை மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் வழங்கும் திட்டம், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கிய திட்டம்  உள்ளிட்ட பல திட்டங்களை அதிமுக அரசின் சிறந்த செயல்பாடுகள் என மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். 

கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளதா? என்ற கேள்விக்கு 51 சதவீதம் பேர் ஆம் என்று  தெரிவித்துள்ளனர். கடந்த அதிமுக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடு நன்று என்று 43 சதவீதம் பேர் கூறி இருக்கிறார்கள். மேலும் இந்த தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு 112 முதல் 120 தொகுதிகள் வரையும், திமுக தலைமையிலான கூட்டணிக்கு 80 முத்த 90 தொகுதிகள் வரையிலும் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதனால் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்கத்தான் அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News