ஜெயலலிதா இல்லம் நினைவிடமாக மாற்றம்.. திறந்து வைத்த முதலமைச்சர்.. அதிமுகவினர் நெகிழ்ச்சி....

மறைந்த தமிழக முதல்வர் சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்டும் பணியை முதல்வர் பழனிச்சாமி கடந்த 2018ம் ஆண்டு மே 8ம் தேதி துவங்கி வைத்தார். கட்டுப்பாணிகள் முடிந்து நேற்று காலை அந்த நினைவிடம் திறக்கப்பட்டது. பீனிக்ஸ் பறவை வடிவில் ஜெ.வின் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதைத்தொடர்ந்து, ஜெ. வசித்து வந்த வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது. முதல்வர் பழனிச்சாமி இன்று காலை அதை திறந்து வைத்தார். இதை திறந்து வைத்த முதல்வர் அப்ழனிச்சாமி ஜெ. பயன்படுத்திய புத்தகங்கள் மற்றும் அவரின் புகைப்படங்களை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள்கள் கலந்து கொண்டனர். நேற்று நினைவிடம், இன்று நினைவு இல்லம் என நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றது அதிமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா வசித்து வந்த வேதா இல்லத்தை தங்கள் கோவிலாக கருதுவதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து மெரினா கடறையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 9 அடி முழு உருவச்சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
நினைவிடம், நினைவு இல்லம், 9 அடி உயர சிலை என தொடர்ந்து அதிமுக தொண்டர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, இது அனைத்திற்கும் காரணமாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தங்களின் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.