×

சூரரை போற்று: 2 நாட்களில் ஐந்து அப்டேட்: முதல் அப்டேட் இதுதான்

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது மின்னல் வேகத்தில் தொடங்கப்பட்டுள்ளன 

 

ஏற்கனவே இந்த படத்தின் மாறாதீம்’ என்ற பாடல் வெளியாகி உள்ள நிலையில் நாளை ’வெய்யோன் சில்லி என்ற பாடல் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இன்றும் நாளையும் அதிரடியாக ஐந்து அப்டேட்களை படக்குழுவினர் வழங்க உள்ளனர் 

முதல் அப்டேட் ஆக இந்த படத்தின் ஏர்லைன் பார்ட்னராக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இணைந்து உள்ளதாக சூரரைப்போற்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது

இதனை அடுத்து அடுத்து இன்னும் நான்கு அப்டேட்டுக்கள் இன்றும் நாளையும் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அப்டேட் இன்று மதியம் 2.30 மணிக்கும், மூன்றாவது அப்டேட் 3 மணிக்கும் நான்காவது அப்டேட் நாளை காலை 11 மணிக்கும் ஐந்தாவது நாளை மாலை 5 மணிக்கும் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரரைப்போற்று படத்தின் அடுத்தடுத்து அப்டேட்கள் சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை

சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News