×

பெட்டிக்கடை காரர் சொன்ன அறிவுரை …. கோபத்தில் கத்தியால் வெட்டிய இளைஞர்களின் கொடூரம் !

புதுச்சேரி அருகே பெட்டிக்கடை வைத்திருந்த திருஞானம் மற்றும் அவரது தம்பி உமாபதி ஆகியோரை மூன்று இளைஞர்கள் கத்தியால் வெட்டிவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.

 

புதுச்சேரி அருகே பெட்டிக்கடை வைத்திருந்த திருஞானம் மற்றும் அவரது தம்பி உமாபதி ஆகியோரை மூன்று இளைஞர்கள் கத்தியால் வெட்டிவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.

புதுச்சேரி அருகே திருக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் திருஞானம் என்பவர் பெட்டிக்கடை வைத்தி நடத்தி வந்துள்ளார். இவரது கடைக்கு அருகே சலூன் ஒன்று உள்ளது. அங்கு முடிதிருத்த வந்த மூன்று இளைஞர்கள் அருகில் உள்ள திருஞானத்தின் கடைக்கு சிகரெட் குடிக்க வந்துள்ளனர். அப்போது அவர்களிடம் கடைக்கு முன்னால் குடிக்காதீர்கள் மறைவாகப் போய் குடியுங்கள் என திருஞானம் சொல்லியுள்ளார்.

அதனால் அவருக்கும் அந்த இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்து ஒரு கட்டத்தில் கத்தியை எடுத்து திருஞானத்தை வெட்ட ஆரம்பித்துள்ளனர். இதில் திருஞானத்துக்கு கையில் வெட்டு விழ அவர் அலறியுள்ளார். இதையடுத்து அருகில் இருந்த அவரது தம்பியான உமாபதி வந்து தடுக்க முயல அவருக்கும் வெட்டு விழுந்துள்ளது.

பின்னர் இருவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த இளைஞர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் மூன்று பேரும் தப்பிச் சென்றுவிட்டனர். இது சம்மந்தமாக போலிஸார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News