விஜய் டிவியில் நேரடி ரிலீஸ்... `ஏலே’ படக்குழுவின் திடீர் முடிவு ஏன்?

`பூவரசம் பீப்பி’, `சில்லுக்கருப்பட்டி’ படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் இயக்கியிருக்கும் படம் `ஏலே’. சமுத்திரக்கனி, மணிகண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஒய் நாட் ஸ்டூடியோ சசிகாந்த், ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருந்தார். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிந்திருந்த நிலையில் படம் பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
#Aelay Exclusive World Premiere on @vijaytelevision !
— Y Not Studios (@StudiosYNot) February 11, 2021
Tune in on Feb 28 at 3PM #AelayFromFeb28 #AelayOnVijayTV@thondankani @halithashameem @sash041075 @PushkarGayatri @chakdyn @Shibasishsarkar @StudiosYNot @RelianceEnt @wallwatcherfilm @APIfilms @SonyMusicSouth @SureshChandraa pic.twitter.com/enctipEZTw
இந்தநிலையில், படம் தியேட்டர்களில் வெளியாகாது. நேரடியாக விஜய் டிவியில் பிப்ரவரி 28-ம் தேதி மதியம் 3 மணிக்கு வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் படத்தை வெளியிடுவதில் தியேட்டர் உரிமையாளர்கள் காட்டிய கெடுபிடியே தயாரிப்பு தரப்பு இப்படி ஒரு முடிவை எடுக்கக் காரணம் என்கிறார்கள். படம் வெளியாகி 30 நாட்களுக்குப் பின்னரே ஓடிடி ரிலீஸ் என்று தயாரிப்பாளரிடமிருந்து தியேட்டர் உரிமையாளர்கள் கடிதம் கேட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், தியேட்டர்களில் வெளியாகி சில தினங்களிலேயே ஓடிடி ரிலீஸையும் தயாரிப்பு தரப்பு திட்டமிட்டிருந்ததால், சிக்கல் நீடித்த நிலையில், இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.