×

பாதிக்கப்பட்ட சினிமா தொழிலாளர்கள் – விஜய் & அஜித் உதவி எப்போது?

தமிழ் சினிமா தினக்கூலி தொழிலாளர்களுக்கு முன்னணி நடிகர் அனைவரும் உதவி அளித்து வரும் நிலையில் இரு பெரும் நடிகர்களான அஜித் மற்றும் விஜய் எப்போது உதவி அளிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு 6 நாட்களுக்கு முன்பாகவே சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதனால் சினிமாவில் தினப்படி சம்பளத்துக்கு வேலை செய்யும் 25,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு உதவி செய்யும் விதமாக முன்னணி நடிகர்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டுமென தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.

நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் (10 லட்சம்), சிவகார்த்திகேயன் (10 லட்சம்), ரஜினி (50 லட்சம்), விஜய்சேதுபதி (10 லட்சம்), தயாரிப்பாளர் தாணு (250 மூட்டை அரிசி)  மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் (150 அரிசி மூட்டை), நடிகர் கமல்ஹாசன்(10 லட்சம்), நடிகர் தனுஷ் (15 லட்சம்), இயக்குனர் ஷங்கர் (10 லட்சம்), பி வாசு (1 லட்சம்), இயக்குநர் ஹரி 100 அரிசி மூட்டைகள், நடிகர் சூரி (8 அரிசி மூட்டைகள்), மனோபாலா (10 அரிசி மூட்டைகள்) என பொருட்களாக அளித்துள்ளனர்.

இதுபோல எல்லோரும் உதவிகளை அளித்து வரும் தமிழ் சினிமாவின் தற்போதைய பல கோடிகள் சம்பளம் பெற்று இரு பெரும் நடிகர்களாக இருக்கும் அஜித்தும் விஜய்யும் எப்போது நிதியுதவி அளிக்கப்போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News