×

14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே சென்டிமென்டில் அஜீத்தின் வலிமை படம்!

வலிமை படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வலிமை படத்தில் பார்ப்பவர்களை ஃபீல் பண்ணச் செய்யும் வகையில் அம்மா, மகன் சென்டிமென்ட் காட்சி இருக்கிறதாம். படத்தின் முக்கிய காட்சிகளில் இதுவும் ஒன்றாம். 

 

மேலும் தாய்மையை கொண்டாடும் வகையில் ஒரு பாடலும் வைத்துள்ளார்களாம். ரேஸிங்கை பற்றிய படம் என்றாலும் அம்மா-மகன் பாசம், காதல் என்று பலதரப்பட்ட எமோஷன்களும் இருக்கிறதாம். வலிமையில் அஜித்துக்கு அம்மாவாக சீனியர் நடிகை சுமித்ரா நடிக்கிறாராம். 

முன்னதாக வீரம் படத்தில் தமன்னாவின் அம்மாவாக, அஜித்துக்கு மாமியாராக நடித்தார் சுமித்ரா. அஜித் அண்மை காலமாக தங்கச்சி, மகள், தம்பி சென்டிமென்ட படங்களில் தான் நடித்து வருகிறார்.

முன்னதாக கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான வரலாறு படத்தில் தான் அம்மா, மகன் சென்டிமென்ட் இருந்தது. அதன் பிறகு 14 ஆண்டுகள் கழித்து வலிமை படத்தில் அந்த சென்டிமென்ட் இருக்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News