இந்த முறை ரஜினி அஜித்தா? பரபரப்பாகும் கோலிவுட்.. பவர் யார்கிட்ட இருக்கு தெரியும்ல
நேற்று கோடம்பாக்கமே பெரும் பரபரப்பில் இருந்தது. திடீரென ரஜினி கமல் தயாரிப்பில் நடிக்கிறார் என்ற ஒரு தகவலை ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டிருந்தது. ஏற்கனவே இது பற்றிய செய்தி அவ்வப்போது வெளியானாலும் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி இப்படியொரு செய்தி வெளியானது.
ஒரு பக்கம் கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கிறார், இன்னொரு பக்கம் ரஜினியும் கமலும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பார்கள் என தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. கடைசியில் கமல் தயாரிக்க சுந்தர் சி இயக்க ரஜினி நடிப்பது உறுதியாகியுள்ளது. கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினியை சுந்தர் சி இயக்க இருக்கிறார். இது ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன் அருணாச்சலம் படத்தின் மூலம் தான் சுந்தர் சி மற்றும் ரஜினி முதன் முறையாக இணைந்தனர். அந்தப் படம் பெரியளவில் வெற்றிப்பெற்றது. ரஜினிக்கும் பெரியளவில் லாபம் ஈட்டிய திரைப்படமாக அமைந்தது. அதனால் இந்த முறையும் சுந்தர் சி மற்றும் ரஜினி கூட்டணி மீண்டும் ஜெயிக்குமா என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ரஜினி தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் முடிந்ததும் உடனே சுந்தர் சியுடன் கைக் கோர்க்கிறார். இது பக்கா எண்டெர்டெயின்மெண்ட் கமெர்ஷியல் படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மேலும் ஹைப் ஏத்தும் விதமாக இன்னொரு செய்தியும் வெளியாகியிருக்கிறது. ரஜினி சுந்தர் சி இணையும் இந்தபடம் 2027 பொங்கல் ரிலீஸாகும் என்று சொல்லப்படுகிறது.
அதே தேதியில்தான் அஜித் ஆதிக் இணையும் படமும் ரிலீஸாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் பாக்ஸ் ஆஃபிஸில் தமிழ் சினிமா ஒரு பெரிய மைல் கல்லை தொடும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே 2019 ஆண்டும் ரஜினியின் பேட்ட திரைப்படமும் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் ஒன்றாக ஒரே தேதியில் தான் ரிலீஸாகியிருந்தது.
இரு படங்களுமே பாக்ஸ் ஆஃபிஸில் சமமான வசூலை பெற்றது. ரஜினி படத்தை பொறுத்தவரைக்கும் கமல் தயாரிப்பு என்பதால் ரெட் ஜெயண்ட் தான் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யும். அதனால் சோலாவாகத்தான் ரிலீஸ் செய்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் அஜித் ஆதிக் படம் தீபாவளியை ப்ளான் செய்துதான் எடுக்க போகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
