Categories: Cinema News latest news

Keerthy Suresh: கார் ரேஸில் குதித்த கீர்த்தி சுரேஷ்! என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? வைரலாகும் வீடியோ

Keerthy Suresh: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிறமொழி படங்களிலும் நடித்து தனக்கான முத்திரையை பதித்தவர்.சமீபத்தில் கூட ஹிந்தியில் வருண் தவானுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்திருந்தார். அது தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ரீமேக் தான்.

அந்தப் படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் முதன் முதலில் அறிமுகமானார். மகாநடி படத்தில் பழம்பெரும் சாவித்ரியின் கதாபாத்திரத்தை ஏற்று சாவித்ரியாகவே வாழ்ந்தார் கீர்த்தி சுரேஷ். அந்தப் படத்தின் கீர்த்தியின் நடிப்பை பார்த்து அவருக்கு தேசிய விருது கிடைத்தது. விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: Amaran: அமரன் படத்துக்கு எதிராக வெடித்த போராட்டம்… திரையரங்குகளுக்கு பலத்த பாதுகாப்பு..

பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அதன் அடிப்படையில் ரகுதாத்தா படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி அந்தப் படம் பேசியது. அதில் கீர்த்தியின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. குழந்தை நட்சத்திரமாக பல மலையாள படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

keerthy

இந்த நிலையில் சமீபகாலமாக துபாயில் அடிக்கடி சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் கீர்த்தி சுரேஷ் தற்போது அபுதாபியில் கார் ரேஸில் பங்கு கொள்வது மாதிரியான வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். ஏற்கனவே வரும் ஜனவரி மாதம் துபாயில் நடக்கும் கார் ரேஸில் அஜித் கலந்து கொள்ள இருக்கிறார் என அனைவருக்கும் தெரியும்.

இதையும் படிங்க: Mahanathi: சன் டிவியில் கிடைத்த பெத்த வாய்ப்பு!… விஜய் டிவியின் மகாநதி சீரியலை கழட்டிவிட்ட பிரபல நடிகை?!…

தற்போது உலகம் முழுவதும் கார் பந்தயம் மிகவும் பிரபலமாகி வருகிறது. சமீபத்தில்தான் சென்னையில் பார்முலா 4 கார் பந்தயத்தை நடத்தி அசத்தினார் உதயநிதி. இதற்கிடையில் கீர்த்தி சுரேஷும் ஃபார்முலா கார் ரேஸில் பங்கு கொள்வது மாதிரியான வீடியோவை வெளியிட்டிருக்கிறார். ஒருவேளை இது கார்பந்தயத்திற்கான விளம்பரமாக கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இதோ அந்த வீடியோ லிங்க்:  https://www.instagram.com/reel/DCHIvi6vsWa/?igsh=MWY5d2p2cWJod2NtMA==

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini