கிணத்த காணோம் கதையா ‘கேம் சேஞ்சரில்’ மிஸ்ஸான ஒரு விஷயம்... அவர் இல்லாதது ஒரு குறைதான்

by Rohini |
gamechanger
X

கேம்சேஞ்சர் நிலைத்ததா?: கடந்த சில தினங்களுக்கு முன்பு பொங்கல் ரிலீஸ் ஆக கேம் சேஞ்சர் திரைப்படமும் தமிழில் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படம் வெளியானது. ஷங்கரை பொறுத்தவரைக்கும் அவர் முதன் முறையாக ஒரு நேரடி தெலுங்கு படத்தை இயக்கி இருக்கிறார் என்றால் அது கேம் சேஞ்சர் திரைப்படம் தான். பாலாவா ஷங்கரா என போட்டி போட்டால் வணங்கான் திரைப்படத்தை கொஞ்சம் மேலேயும் கேம் சேஞ்சர் திரைப்படத்தை கீழேயும் வைத்து தான் ஒப்பிட முடியும்.

எவ்வளவு மசாலா படத்தை பார்த்திருப்போம்?: இரண்டு படமுமே அவர்களது பாணியிலிருந்து விலகாத படங்களாக இருந்தாலுமே வணங்கான் படத்தை மேலே வைக்கிற அளவுக்கு பாலா சிறப்பாக செய்து இருக்கிறார். சங்கர் வழக்கம் போல அவருடைய பிரம்மாண்டத்தை மட்டுமே நம்பி இருக்கிறார். இந்த படத்தில் கதைனு பார்க்கும் பொழுது அதுதான் நடக்கப்போகுது இதுதான் நடக்கப்போகுது என சொல்லிக் கொண்டே போகலாம். இன்னொரு விஷயம் ஆந்திர மக்கள் பார்க்காத மசாலா படத்தை நீங்கள் கொடுக்கப் போவதில்லை.

பல வகையான ரசிகர்கள்: அவ்வளவு மசாலாவை அவர்கள் பார்த்து விட்டார்கள். அதைத் தாண்டி சங்கர் என்ன கொடுக்கப் போகிறார்? அவர்களுக்கு பிடித்த மாதிரி என்ன இருக்கப் போகிறது என்றுதான் கேம் சேஞ்சர் திரைப்படத்தை எதிர்பார்த்தனர். இதே தெலுங்கு படங்களில் கே. விஸ்வநாதன் படங்கள் எல்லாம் வந்திருக்கின்றன. அப்படி ஒரு தரப்பு ரசிகர்களும் அங்கு இருக்கிறார்கள். ரொம்ப அற்புதமான காதல் படங்களும் வந்திருக்கின்றன. அதை ரசிக்கிற ரசிகர்களும் இருக்கிறார்கள்.

ஆதங்கத்தில் கேம் சேஞ்சர்: பாலகிருஷ்ணா தரப்பு படங்களும் இருக்கின்றன. இதே மாதிரி தான் ஷங்கரும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து இறங்கினார். ஆனால் கதையை விட அவருடைய பிரம்மாண்டத்தை மட்டுமே நம்பி இருக்கிறார். இந்த படத்திற்கு செய்த செலவுகளை எல்லாம் பார்க்கும் பொழுது நமக்கு வயித்தெரிச்சலாக இருக்கிறது. இந்த கதைக்கு போய் இவ்வளவு காசு கொட்டி வைத்திருக்கிறார்களே என்று ஆதங்கமாக இருக்கிறது.

ஷங்கர் அவருடைய பழைய படங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து போட்டு இந்த கதையை பண்ணியிருக்கிறார். தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் அந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஆந்திராவில் ராம்சரணுக்காக ஏதோ அந்த படம் ஓடிக் கொண்டிருக்கின்றது. அதனால் இந்த படம் பெரிய வெற்றியும் இல்லை. பெரிய தோல்வியும் இல்லை. அதுமட்டுமல்ல ஷங்கர் எப்பொழுது ஏ ஆர் ரகுமானை விட்டு விலகினாரோ அப்பவே அவருடைய வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது.


ஏனெனில் தமன் இசையில் ஒரு அருமையான மெலோடி பாடல். அந்தப் பாடல் எல்லா டிவியிலும் விளம்பரத்திற்காக பயன்படுத்தப்பட்டது. அது கிட்டத்தட்ட 10 கோடிக்கு மேல் செலவு செய்த பாடல். அந்தப் பாடல் படத்தில் இல்லை. அப்போ எதுக்கு இவ்வளவு செலவு செய்து எடுக்க வேண்டும்? தயாரிப்பாளர் காசை கொண்டு வந்து இறைக்கிறார் என்பதற்காக அதை வாங்கி அப்படியே ரோட்டில் போட்ட மாதிரி அந்தப் பாடலையே படத்தில் பயன்படுத்தவே இல்லை என கேம் சேஞ்சர் திரைப்படத்தை பற்றி வலைப்பேச்சு அந்தணன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

Next Story