Categories: Cinema News latest news

அட்லீயை தொடர்ந்து ‘கான்’ ஹீரோவுக்கு கதை கூறிய லோகேஷ்.!? கைதி-2, விக்ரம்-2வுக்கு கல்தா.?

இயக்குனர் அட்லீ பாலிவுட்டை நோக்கி சென்று விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதன்படி, பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக் கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். தற்போது, அதே பானையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு சல்மான் கான் நடிக்கும் இந்தி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கானுக்கு லோகேஷ் ஒரு கதை கூறியதாகவும் இந்த படத்தை தெலுங்கு சினிமா துறையைச் சேர்ந்த ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படம் குறித்த பேச்சு வார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது, இப்படம் குறித்த பேச்சு வார்த்தைகள் இன்னும் இறுதிக்கட்த்தை நோக்கி செல்லவில்லை என்றும் சரியாக நடந்தால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்களேன் – என் வாழ்வில் அந்த பெண்ணை மட்டும் நான் மறக்கவே மாட்டேன்.. ஓப்பனாக கூறிய தனுஷ்.!

ஆனால், அதற்கு முன் லோகேஷ் கனகராஜூக்கு சில கமிட்மென்ட்கள் உள்ளதால் இந்த பட குறித்த அறிவிப்பு வெளியாக சிறிது நாள் எடுக்கும் என கிசுகிசுக்கப்படுகிறது. அதாவது, லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யின் 67வது படத்தை இயக்கவுள்ளார், மேலும் இயக்குனர் தற்போது படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

Manikandan
Published by
Manikandan