×

பாபா படத்துக்கு பிறகு அண்ணாத்ததான்… பல ஆண்டுகளுக்கு ரஜினியின் ஈடுபாடு!

நடிகர் ரஜினிகாந்த் பாபா படத்துக்குப் பிறகு மீண்டும் அண்ணாத்த படத்தில் சில பஞ்ச் வசனங்களை தானே தனக்காக எழுதியுள்ளாராம்.

 

நடிகர் ரஜினிகாந்த் பாபா படத்துக்குப் பிறகு மீண்டும் அண்ணாத்த படத்தில் சில பஞ்ச் வசனங்களை தானே தனக்காக எழுதியுள்ளாராம்.

நடிகர் ரஜினிகாந்த் தான் கதை எழுதிய பாபா படத்தில் மிகுந்த ஆர்வமாக சில வசனங்களையும் எழுதினார். மற்ற படி அவர் படங்களில் அவர் நடிப்பைத் தவிர மற்ற இலாகாக்களில் தலையிடுவது இல்லை. இயக்குனர் சொல்வதை அப்படியே செய்துவிட்டு போய்விடுவார். ஆனால் பாபா படத்தின் தோல்வியால் எந்த படத்திலும் அவர் வசன இலாகாவில் தலையிடவில்லை.

இந்நிலையில் இப்போது அண்ணாத்த படத்தில் பாபா படத்தைப் போல தன் கதாபாத்திரத்துக்காக தானே சில வசனங்களை யோசித்து இயக்குனர் சிறுத்தை சிவாவிடம் சொல்லியுள்ளாராம். இதைக் கேட்ட இயக்குனர் சிவா ரஜினி கதையின் மேல் கொண்ட ஈடுபாட்டை பார்த்து நெகிழ்ந்து போய்விட்டாராம்.

From around the web

Trending Videos

Tamilnadu News