Categories: Cinema News latest news

பீஸ்ட் மாபெரும் வெற்றிக்கு விருந்து வைத்து அசத்திய விஜய்.! வெளியான பார்ட்டி புகைப்படம்.!

தமிழகத்தில் ஒரு 10 நாளுக்கு முன்னர் சலசலப்பை ஏற்படுத்திய திரைப்படம் பீஸ்ட். அந்த படம் எப்படி இருக்கு? எதிர்பார்த்தது போல இருந்ததா? பீஸ்ட் விமர்சனம் வந்துள்ளது.  படம் எப்படி இருந்தாலும் பீஸ்ட் வசூல் அள்ளிவிட்டது. அது முன்பதிவு வசூல் என பலர் பலவாறு பேசி வந்தனர்.

ஆனால், அதனை தவிர்த்து பீஸ்ட் ஓர் மொக்கை படமெல்லாம் கிடையாது. அது சரியான நேரத்தில், சரியான ட்ரைலர் காண்பிக்கப்பட்டு, ரசிகர்ளும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டருக்கு வந்திருந்தால் நல்ல படமாகவே பார்க்கப்பட்டிருக்கும்.

ட்ரைலரில் ஆக்சன் காண்பித்து படத்தில் அது இல்லாமல் போனதால் இந்த குழப்பம் பீஸ்ட் படத்திற்கு ஏற்பட்டு விட்டது. இருந்தாலும் வழக்கம் போல விஜய்க்கென இருக்கும் மாஸ் வசூலில் பீஸ்ட்டை காப்பாற்றிவிட்டன. அதற்கு ஓர் சாட்சிதான் தற்போது நடந்து முடிந்துள்ள விருந்து.

ஆம், விஜய், பீஸ்ட் படத்தின் வெற்றிக்காக, பீஸ்ட் தொழில்நுட்ப கலைஞர்களை அழைத்து சிறிய விருந்து கொடுத்துள்ளார். இதனை நெல்சன் பதிவிட்டு, இந்த வாய்ப்பை வழங்கிய விஜய், சன் பிக்ச்சர்ஸ் என பலருக்கும் நன்றி தெரிவித்தும், ரசிகர்கள் கொடுத்த அன்பிற்கு நன்றி தெரிவித்தும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்களேன் – கருப்பு எம்.ஜி.ஆர் உருவாக காரணமே நான் தான்.! வியக்க வைத்த குட்டி கதை.! ரகசியம் கூறிய ‘அந்த’ இயக்குனர்.!

இந்த விருந்தில் இயக்குனர் நெல்சன், பூஜா ஹெக்டே, அனிருத், ஆர்ட் இயக்குனர் கிரண், விடிவி கணேஷ் , நடிகர் சதிஷ் என பலர் இருக்கின்றனர். இந்த விருந்து விஜய் வீட்டில் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த இடம் என உறுதியாக தெரியவில்லை.

Manikandan
Published by
Manikandan