Categories: Cinema News latest news

விஜயகாந்த் மறைவுக்கு வடிவேலு ரியாக்‌ஷன் என்ன தெரியுமா? ஷாக் கொடுத்த நண்பர்

Actor Vijayakanth: கிட்டத்தட்ட ஒரு வாரம் மேலாகியும் இன்னும் கேப்டனின் நினைவிடத்தை தேடி மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் நினைவிடத்திற்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்கின்றனர்.

ஆனால் சினிமாவில் இருக்கும் ஒரு சில முன்னனி நடிகர்கள் முக்கியமான நடிகர்கள் என யாருமே ஊரில் இல்லை. ஒரு பக்கம்  நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் கார்த்தி, விஷால் வெளி நாட்டில் இருந்தனர். நினைத்திருந்தால் வந்திருக்க முடியும்.

இதையும் படிங்க: கேப்டன் சினிமாவில் நிலைத்து நின்றதற்கு இதுதான் காரணமா? இளரவசு சொல்லும் ரகசியம்…!

அதே போல் அஜித், சூர்யா என டாப் நடிகர்களும் பங்கேற்க வில்லை. ஏன் அஜித் இன்றுவரை அவர் நினைவிடத்திற்கு வந்த அஞ்சலி செலுத்தவரவில்லை. நடிகர்களுக்காகவும் நடிகர் சங்கத்திற்காகவும் தன் உடலையும் பொருட்படுத்தாமல் ஓடோடி உழைத்தவர் விஜயகாந்த்.

அவருக்கு காட்டும் நன்றிக் கடன் இதுதானா? இதில் வடிவேலுவை தான் அனைவரும் எதிர்பார்த்துக்க் கொண்டிருந்தார்கள். நல்லதுக்கு வரவில்லை என்றாலும் இந்த மாதிரி நிகழ்வுக்கு கட்டாயம் வரவேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் வடிவேலு வராததது அனைவருக்கும் ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: கேப்டன் சினிமாவில் நிலைத்து நின்றதற்கு இதுதான் காரணமா? இளரவசு சொல்லும் ரகசியம்…!

விஜய் வந்ததுக்கே செருப்பை வீசினார்கள். வடிவேலு வந்திருந்தால் என்னாகியிருக்கும்? என்றுதான் யோசிக்க வைத்தது. இந்த நிலையில் வடிவேலுவின் நண்பர் ஒருவர் வடிவேலு குறித்து அண்மையில் பேசியிருக்கிறார். விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு வடிவேலு கதறி கதறி அழுதாராம்.

அன்று ஒரு நாள் முழுக்க சாப்பிடவே இல்லையாம். வந்தால் எதாவது அசம்பாவிதங்கள் நடந்துவிடும் என்பதற்காகவே வடிவேலு வரவில்லையாம். வேறு எந்த காரணமும் இல்லை என்றும் அந்த நண்பர் கூறினார். ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

இதையும் படிங்க: 25 வருடமாக கேப்டன் நினைவாக சூர்யா செய்யும் செயல்! இதுவரைக்கும் தெரியாத ஒரு விஷயம்

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini