Rioraj: ‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்தின் வெற்றி.. ரியோவுக்கு அடித்த ஜாக்பாட்..
சமீபத்தில் ரியோராஜ் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது. சின்னத்திரையில் ஆங்கராக தன்னுடைய கெரியரை ஆரம்பித்த ரியோ தொலைக்காட்சி தொடர் பலவற்றிலும் நடித்து மக்கள் மனதில் ஒரு சின்னத்திரை ஹீரோவாக உயர்ந்தார். குறிப்பாக விஜய்தொலைக்காட்சியில் மிகவும் புகழ்பெற்ற தொடரான சரவணன் மீனாட்சி தொடரிலும் நடித்தார்.
தற்போது அவர் படங்களில் நடித்து வருகிறார். இவருடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல ஒரு வரவேற்பு இருக்கிறது. இதற்கு முன் ஜோ படத்தின் மூலம் அவருடைய முதல் வெற்றியை பதிவு செய்தார் ரியோ. படங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவந்தார்.
அந்த நிகழ்ச்சியை மிகவும் கலகலப்பாக கொண்டு போனதில் ரியோவின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக அந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் ரியோவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிக்கும்படியாக இருந்தது. அதற்காகவே அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் ஏராளம்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்திருக்கிறார் ரியோ. அவருடைய நடிப்பில் வெளியான ஆண்பாவம் பொல்லாதது படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வெற்றிக்கு கிடைத்த பலனாக ரியோ இப்போது நான்கு படங்களில் கமிட் ஆகியிருக்கிறாராம். அதில் ஒரு படத்தை கார்த்திக் சுப்பாராஜ் தயாரிக்கிறாராம்.

இன்னொரு படத்தை சிவகார்த்திகேயன் புரடக்ஷன் தயாரிக்கிறதாம். இன்னொரு படத்தை புதுமுக இயக்குனர் இயக்குகிறாராம். இப்போது இளம் தலைமுறை நடிகர்கள் புதுசாக முளைத்து வருகின்றனர். அவர்களுக்கு வழிவிட்டு அவர்களுக்கும் சப்போர்ட் செய்து வருகிறார்கள் ஒரு சில முன்னணி நடிகர்கள். அதில் சிவகார்த்திகேயனும் ஒருவர்.
