Connect with us

Cinema News

அடுத்து 4 பிரம்மாஸ்திரத்தை வச்சிருக்காரு பிரபாஸ்!.. ஒவ்வொரு படமும் 1000 கோடி.. தலையே சுத்துதே!..

பிரபாஸ் நடிப்பில் வெளியாகி உள்ள சலார் திரைப்படம் 2 நாட்களில் 295 கோடி வசூல் செய்து இந்திய திரையுலகத்தையே மிரட்டி வருகிறது. கிறிஸ்துமஸ் விடுமுறையுடன் சேர்த்து ஜெயிலர், லியோ வசூலுக்கெல்லாம் சலார் சங்கு ஊதிவிடும் என்று தான் தெரிகிறது. இந்நிலையில், இத்துடன் அவரது ஹிட் லிஸ்ட் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் நிற்கப் போவதில்லை. இன்னும் ஒரு 6 வருஷத்துக்கு தோல்விகளை கண்டு துவண்டு போகவும் மாட்டார் என அடித்து சொல்கின்றனர்.

ஏனென்றால் அடுத்து 4 பெரிய படங்கள் தரமான இயக்குநர்கள் இயக்க பிரபாஸ் நடித்து வருவதும் நடிக்க உள்ளதும் தான் காரணம் என்கின்றனர்.

இதையும் படிங்க: அர்த்தமாயிந்தா ராஜா!.. விஜய் ஃபேன் தியேட்டர்லையே இப்படி கீழ இறக்கி உட்கார வச்சிட்டாரே சூப்பர்ஸ்டார்!

இமிடியேட்டாக அடுத்த ஆண்டு நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பசுபதி நடிப்பில் கல்கி படம் வெளியாக காத்திருக்கிறது. அந்த படத்தின் பட்ஜெட்டே 500 கோடிக்கும் அதிகம் என்பதால் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் 1000 கோடியை தாண்டும் என தெரிகிறது.

அந்த படத்தை முடித்து விட்டு மாளவிகா மோகனன் ஜோதியாக நடிக்கும் மாருதி படத்திலும் பிரபாஸ் நடிக்க உள்ளார். மாருதி படமும் பெரிய பட்ஜெட்டில் தயாராக உள்ளது. இதுமட்டுமின்றி அர்ஜுன் ரெட்டி, அனிமல் படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஸ்பிரிட் எனும் படத்திலும் நடிக்க பிரபாஸ் கமிட் ஆகி உள்ளார்.

இதையும் படிங்க: காலையில தான் லவ்வர்ன்னு அறிமுகப்படுத்திட்டு!.. இப்போ அசிங்க அசிங்கமா திட்டுறாரே மணிகண்டன்!..

இதெல்லாம் முடிந்து விட்டால் மீண்டும் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தின் 2ம் பாகமான சவுர்யங்கா பர்வம் படத்தில் தான் பிரபாஸ் நடிக்க உள்ளாராம். ராஜமெளலி இல்லாமலே அடுத்து 4 பெரிய படங்கள் பிரபாஸுக்கு உள்ள நிலையில், மேலும், 4000 கோடி வசூலை கொடுக்கப் போகும் பிரபாஸ் சம்பளத்தையே 200 கோடிக்கும் மேல் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top