இயக்குநராக 'சிக்மா'-வை முடித்த விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்... அடுத்து ஹீரோ அவதாரமா?

 
Vijay sigma jason sanjay

முன்னணி நடிகராக கோலிவுட்டில் வலம் வந்த விஜய் இப்போது தமிழக முதலமைச்சராக உள்ளார். இவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநர் சீட்டில் அமர்ந்து 'சிக்மா' என்ற படத்தையும் எடுத்து முடித்து விட்டார்.

இதில் 'மாநகரம்' புகழ் சந்தீப் கிஷன் தான் கதாநாயகன். முதலில் இதை வருகிற ஜூலை 31-ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தனர்.

இதற்கிடையில் விஜய்யின் கடைசி படமான 'ஜன நாயகன்' ஜூலை 24-ஆம் தேதியில் ரிலீஸ் ஆகப்போவதால், 'சிக்மா' ரிலீஸை ஆகஸ்ட் மாதம் இறுதிக்கு ஒத்தி வைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இயக்குநராக ஒரு படத்தை வெற்றிகரமாக முடித்த ஜேசன் சஞ்சய், அடுத்ததாக தனது அப்பாவை போல் ஹீரோ அவதாரம் எடுக்கவுள்ளாராம். மிகப் பிரபலமான இயக்குநர் இயக்கப்போகும் இந்த படத்தை 'தமிழ் குமரன் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம் .

From Around the web