Connect with us

Cinema News

விஜயகாந்த் சமாதியில் மண்டிப்போட்டு வணங்கிய ஜெயம் ரவி.. கண்ணெல்லாம் கலங்கிடுச்சு.. அடுத்து யாரு?

கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி புத்தாண்டுக்கு முன்னதாக உயிரிழந்தார். தமிழ் சினிமாவின் பல இளம் நடிகர்கள் மற்றும் நடிகைகள் எல்லாம் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளிநாடுகளில் சுற்றுலா சென்றிருந்தனர். இந்நிலையில், சென்னைக்கு மீண்டும் திரும்பிய அவர்கள் ஒவ்வொருவராக விஜயகாந்த் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நேற்று நடிகர்கள் சிவகுமார் மற்றும் கார்த்தி அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று நடிகர் சூர்யா வந்து கண்ணீர் மல்க தேம்பி தேம்பி அழுதது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சூர்யாவை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் இன்று கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இதையும் படிங்க: கலைஞர் 100வது விழாவுக்கு ‘நோ’ சொன்ன விஷால்!.. பின்னணியில் இருப்பது அந்த நடிகராம்!…

சூர்யா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரையும் புளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்து ட்ரோல் செய்திருந்தார்.  இந்நிலையில், தற்போது நடிகர் ஜெயம் ரவி சென்னை திரும்பிய நிலையில்,  விஜயகாந்த் சமாதிக்கு வந்து மண்டிப்போட்டு வணங்கி கண் கலங்கி அழுத காட்சிகள் வெளியாகி உள்ளன.

நடிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்த வரமுடியவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்தனர். ஆனால், தற்போது சென்னைக்கு ரிட்டர்ன் ஆகி வரும் நடிகர்கள் விஜயகாந்த் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருவதை தேவையில்லாமல் ட்ரோல் செய்யக் கூடாது என அந்த நடிகர்களின் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பர்ஃபாமன்ஸ்லாம் பண்ண முடியாது!. கலைஞர் 100வது விழாவுக்கு எஸ்கேப் ஆகும் நடிகர்கள்…

நாளை கலைஞர் 100 விழா நடைபெற உள்ள நிலையில், மேலும், பல நடிகர்கள் விஜயகாந்த் சமாதிக்கு நாளை காலை முதல் படையெடுப்பார்கள் என தெரிகிறது.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top